Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாகேலிக்கு ஆளான ஆதிபுருஷ்.. தற்போது டிரைலர் வெளியானது..திருப்தி படுத்தியதா ?

கேலிக்கு ஆளான ஆதிபுருஷ்.. தற்போது டிரைலர் வெளியானது..திருப்தி படுத்தியதா ?

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு ஆதிபுருஷ் என்ற திரைப்படம் இயக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் நடிகை கிரித்தி சலூன் மற்றும் நடிகர் சைப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது ராம,சீதா  மற்றும் ராவணன் என்று கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தத் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெளியாக்கப்பட்ட நாட்களில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தின் உடைய டீசரை ரசிகர்கள் பெருமளவில் விமர்சித்து வந்தார்கள்.

- Advertisement -

இது ஒரு கிராபிக்ஸ் திரைப்படம் ஆகும். அதுவும் முதலில் ஜனவரி மாதம் வெளியிடுவதற்காக தயார் செய்து வெளியிடப்பட்ட அந்த டீசர் முற்றிலும் எதிர்மறையான விமர்சனத்தை ரசிகர்களிடம் பெற்றது. பார்ப்பதற்கு ஒரு பிரம்மாண்டமும் இல்லாமல் ஒரு ஈர்ப்பும் இல்லாமல் ஏதோ கேலிச்சித்திரம் போன்று  காட்சி அளித்தது. இதனால் அந்த டீசர் சற்று கேளிக்கை உள்ளானது.

- Advertisement -

இது பற்றி அறிந்த படக்குழுவினர்கள் சற்று விழிப்புணர்வோடு அன்று அந்த திரைப்படத்தை வெளியிடாமல் நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு விடாமுயற்சி செய்து தற்பொழுது இந்த திரைப்படத்தின் உடைய டிரைலரை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.இதை பார்ப்பதற்கு இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டும் அளவிற்கு சற்று பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

700 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் இப்பொழுதுதான் அந்த தாக்கத்தை ரசிகர்களுடன் ஏற்படுத்தி இருக்கிறது.இதில இடம் பெற்றிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் சிறந்த முறையில் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான மாறுபாடுகள் செய்யப்பட்ட இந்த ஆதிபுருஷ் என்ற திரைப்படம் ஹிந்தி மற்றும தெலுங்கில் எடுக்கப்பட்டு தற்போது தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியிடப்பட இருக்கிறது. வருகின்ற ஜூன் மாதம் 16ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்த கண்ணோட்டம் மாறி தற்பொழுது இந்த டிரைலர் பார்த்த பிறகு ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் . மேலும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆக உள்ளது மொபைலில் பார்ப்பதை விட திரையரங்குகளில் பார்க்கும்போது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Most Popular