Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஅதர்வா தம்பிக்கு ஜோடியான அதிதி ஷங்கர்.. விஸ்ணுவர்தன் இயக்கத்தில் முதல் ஷெட்யூல்  முடிவு.. மாஸ்டர் படப்புகழ்...

அதர்வா தம்பிக்கு ஜோடியான அதிதி ஷங்கர்.. விஸ்ணுவர்தன் இயக்கத்தில் முதல் ஷெட்யூல்  முடிவு.. மாஸ்டர் படப்புகழ் சேவியர் பிரிட்டோ தான் தயாரிப்பாளராம்!

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, கார்த்தியின் ‘விருமன்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவர் நடிப்பும் நடனமும் கவனிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மாவீரன் படத்தில் நடிகை அதிதி ஷங்கரின் நடிப்பு பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

- Advertisement -

அடுத்தடுத்து வெற்றிப்படங்கள்

அதேபோல் விருமன் மற்றும் மாவீரன் படங்கள் வெற்றிபெற்றதால், ராசியான நடிகை என்ற பெயரும் கிடைத்துவிட்டது. நடிப்பு மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் அதிதி ஷங்கர் இருக்கிறார். 2கே கிட்ஸ்-கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பதால், இவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் முன்னணியில் நிற்கிறார்கள்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்

அதேபோல் சம்பள விவகாரத்தில் பெரிதாக கெடுபிடி காட்டுவதில்லை. தற்போது சூழலில் படத்தில் ஒப்பந்தமாவதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளார் அதிதி ஷங்கர்.  இந்த நிலையில் அதிதி ஷங்கர் தனது அடுத்த படத்தில் ‘அறிந்தும் அறியாமலும்’,‘பட்டியல்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

- Advertisement -

விஷ்ணுவர்தன் கடைசியாக ‘ஷெர்ஷா’ என்ற இந்திப் படத்தை இயக்கி இருந்தார். வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை அடுத்து தமிழில் படம் இயக்குகிறார். இந்த படத்தின் நாயகனாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கவுள்ளார். இவர் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மருமகன்.

- Advertisement -

வெளிநாடு செல்லும் படக்குழு

மருமகன் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தை மாமனாரே தயாரிக்கிறார். இந்த நிலையில் சென்னையில் விஷ்ணுவர்தன் ஷூட்டிங்கை தொடங்கி முதல் ஷெட்யூலை முடித்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அடுத்தக் கட்ட ஷூட்டிங்கை வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது.

முக்கியமான இயக்குநர்கள் படத்தில் அதிதி ஷங்கர் அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதால், இளம் நடிகைகள் பலரும் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்று ஏற்கனவே கோலிவுட் வட்டாரம் பேசி வந்தது. தற்போது ஸ்டைலிஷ் இயக்குநரான விஷ்ணுவர்தன் அதிதி ஷங்கரை அழகாக படம்பிடித்து வருவதால், கோலிவுட் ஹீரோயின்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பேசப்பட்டு வருகிறது.

Most Popular