Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாவேட்டையாடு விளையாடு படத்தைத் தொடர்ந்து கமலின் இன்னும் 2 கிளாசிக் காமெடி படங்கள் ரீ-ரிலீஸ்.. !

வேட்டையாடு விளையாடு படத்தைத் தொடர்ந்து கமலின் இன்னும் 2 கிளாசிக் காமெடி படங்கள் ரீ-ரிலீஸ்.. !

லாக்டவுனுக்குப் பின் மக்களால் கொண்டாடப்பட்ட பல படங்கள் ரீ ரீலீஸ் ஆவதை நாம் கண்டோம். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், ரஜினியின் பாபா, ஹிந்தி படமான தமாஷா போன்ற தலைசிறந்த படங்கள் மீண்டும் திரையரங்கிற்கு வந்தது.

- Advertisement -

வேட்டையாடு விளையாடு ரீ ரீலீஸ்

கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி, டேனியல் பாலாஜி, பிரகாஷ்ராஜ் உட்பட சிலர் நடிப்பில் வந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இயக்குனர் கவுதம் மேனனின் ஃபேன் பாய் படமான இது 17 ஆண்டுகளுக்கு முன் வெளியான போதே சூப்பர் ஹிட் ஆனது. தற்போது அண்மையில் மீண்டும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான ஒரு வாரத்தில் 11 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

கமல்ஹாசனின் கிளாசிக் காமெடி திரைப்படம்

கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாவது வெற்றியைத் தொடர்ந்து அவரின் மற்றொரு சிறப்பான படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். கமல்ஹாசன் மற்றும் கிரேசி மோகனின் கலக்கலான கூட்டணியில் எழுதப்பட்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய கிளாசிக் காமெடித் திரைப்படம் பஞ்சதந்திரம்.

- Advertisement -

கமல்ஹாசன், ஜெயராம், யுகி சேது, ரமேஷ் அரவிந்த், ஶ்ரீராம், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், நாகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் கிரேசி மோகன் எழுதிய காமெடி வசனங்கள் அனைத்தும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த ஒன்று. பல மாதங்களாக இந்தப் படத்தின் ரீமாஸ்டர்ட் ஹெச்.டி பிரின்ட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

ரீ ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள்

டிவிட்டரில் பஞ்சதந்திரம் படத்தின் தயாரிப்பாளரான தேனப்பன், “ பஞ்சதந்திரம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை இந்த தலைமுறை பார்வையாளர்களும் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. கமல்ஹாசன் அவர்களின் துணையால் மீண்டும் பஞ்சதந்திரம் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வர நானும் எனது டீமும் முயற்சி செய்து வருகிறோம். ” என்றார்.

கமல்ஹாசனின் சினிமா ஆண்டு விழாவுக்கு இப்படிரை எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தோடு கமல்ஹாசன் – தேனப்பன் கூட்டணியில் வெளியான மற்றொரு காமெடி திரைப்படமான தெனாலி படத்தையும் ரீ ரீலீஸ் செய்ய எண்ணுகின்றனர். இந்தப் பட்டியலில் விக்ரமின் சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தையும் நாம் விரைவில் பார்க்கலாம். அதற்கான முயற்சியும் போய்க் கொண்டிருக்கிறது.

Most Popular