Sunday, May 5, 2024
- Advertisement -
HomeEntertainmentவிடாமுயற்சி கைவிடப்பட்டதா.. எவன் சொன்னது? லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

விடாமுயற்சி கைவிடப்பட்டதா.. எவன் சொன்னது? லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

அ.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளியான துணிவு திரைப்படம் பெரு வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பின் அஜித் குமார் மீண்டும் தனது மோஜோவுடன் தோன்றி திரையை ஆக்கிரமித்ததாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதனால் விஜயின் வாரிசு படத்துடன் வெளியாகியும் பொங்கல் ரேஸில் துணிவு படம் பந்தயம் அடித்தது.

- Advertisement -

இதன் பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதையின் இரண்டாம் பாதி சரியில்லாததால், லைகா நிறுவனம் இயக்குநரை மாற்றியது. இதன் பின் த்ரில்லர் கதையை அசத்தலாக இயக்கும் மகிழ் திருமேனி அஜித்தின் 61வது படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன்பின் விடா முயற்சி என்று டைட்டில் வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான கதை விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், அஜித் குமார் மீண்டும் தனது பைக் ட்ரிப்பை தொடங்கினார். பொங்கலுக்கு துணிவு படம் வெளியாகிய நிலையில், கிட்டத்தட்ட 9 மாதங்களாகியும் அஜித் குமார் அடுத்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கவில்லை.

- Advertisement -

இதனால் விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் கைவிட்டதாக தகவல் பரவியது. இதன் காரணமாகவே அஜித்குமார் பைக் ட்ரிப்பை முடித்து வேக வேகமாக சென்னை திரும்பியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடைபெற்றது.

- Advertisement -

அந்த விழாவில் லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன், அஜித் குமார் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி படம் சரியான வேகத்தில் இருக்கிறது. அது எங்களின் மதிப்புமிக்க பிராஜக்ட். விரைவில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிவித்தார். விடாமுயற்சி படத்திற்காக அஜித்குமாருக்கு ரூ.105 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular