சினிமா

அஜித் ரசிகர்களுக்கு துணிவு படக்குழுவினர் கொடுத்த மிகப்பெரிய அப்டேட்! இனிமே அஜித்தை இங்கேயும் பார்க்கலாமாம்

ஜி ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு இந்த படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கொகேன், சமுத்திரக்கனி, வீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தது.

இது பற்றி தயாரிப்பாளர் போனி கபூர் போட்டிருக்கும் ட்வீட்டீன் படி, இப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தினை ரெட் ஜெயின்ட் மூவிஸ் ரிலீஸ் உரிமத்தினை பெற்றுள்ளனர். தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும் ஓடிடி உரிமையை நெட்ப்லிக்ஸ் பெற்றுள்ளது.

Advertisement

இப்படத்திற்கான இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

அதேசமயம் படத்தினை பிரபலப்படுத்த பல வேலைகளும் பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளன. அதில் துணிவு திரைப்படத்தின் “பிரீ ரிலீஸ் ஈவன்ட்” நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அஜித்திடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

அவர் கலந்து கொள்ளும் பட்சத்தில் விழாவானது “நேரு உள் விளையாட்டு அரங்கில்” நடத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் நடிகர் அஜித்குமார் அது குறித்து இன்னும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அஜித் குமார் கடந்த பத்து வருடங்களாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகள் மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அது படத்திற்கு பெரும்பலமாக அமைவதுடன் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் இந்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என பட குழுவினர் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top