Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentசிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்த ஷாலினி.. தீயாய் பரவும் குட்டி தல ஆத்விக் புகைப்படம்.. ஒரு...

சிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்த ஷாலினி.. தீயாய் பரவும் குட்டி தல ஆத்விக் புகைப்படம்.. ஒரு வழியா சோகத்தில் இருந்து வெளிவந்த அஜித் குடும்பம்!

சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை வரிசையாக சினிமா பிரபலங்கள் நேரில் வந்து கண்டு ரசிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், த்ரிஷா, மேகா ஆகாஷ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முந்தைய போட்டிகளை கண்டு ரசித்த நிலையில், நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் நேரில் கண்டு ரசித்தார்.

- Advertisement -

குட்டி தல என ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து அவரது போட்டோக்களை அதிகம் ஷேர் செய்தனர். நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் மற்றும் மகள் இருவரையும் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை பார்க்க சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு அழைத்து வந்திருந்தார். அந்த காட்சிகள் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் தற்போது டிரெண்டானது.

இதேபோல் நடிகை பிரியங்கா மோகனும் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். அவரை ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர். மில்லர் படக்குழு ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்த போட்டியை கண்டு ரசித்த நிலையில், சென்னையில் நடைபெற்ற போட்டியையும் கண்டு ரசித்துள்ளது.

- Advertisement -

பிரியங்கா மோகன் உடன் நடிகர் தனுஷும் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியை பார்த்து ரசித்தார். அவருடன் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கும் வந்து பார்த்து வரும் நடிகர் சதீஷ் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படமும் தீயாக பரவி வருகிறது.

- Advertisement -

இதேபோல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உடன் சேர்ந்து பல சினிமா பிரபலங்களும் இந்த போட்டியையும் சென்னையில் நேற்று இரவு கண்டு ரசித்தனர். நேற்று ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Most Popular