Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாதல ,தளபதி படத்தை இவங்க தான் தயாரிக்க போறாங்களா..!அப்போ செம மாசா இருக்குமே..!

தல ,தளபதி படத்தை இவங்க தான் தயாரிக்க போறாங்களா..!அப்போ செம மாசா இருக்குமே..!

தல அஜித் மற்றும் தளபதி விஜயின் அடுத்த திரைப்படத்தை பற்றிய அப்டேட்ஸ்கள் ஒரே நேரத்தில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கோட் திரைப்படத்தை நடித்துக் கொண்டிருக்கிறார் .இது இவருடைய 68 வது திரைப்படம் ஆகும். இந்நிலையில் தளபதி விஜய் தன்னுடைய 69 வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடிக்கப் போவதாக அண்மையில் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தை ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை தயாரித்த தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

அதேபோல் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தல அஜித் தன்னுடைய 63 வது திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கப் தயாரிக்க போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

இந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்களுமே தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் ஆகும். இதில் தல, தளபதி ஆகிய இருவரும் நடிப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

மேலும் இப்படி  பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கும் இந்த திரைப்படங்கள் பேன் இந்தியன் மொழிகளில் வெளிவந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

கோட் மற்றும் விடாமுயற்சி பற்றி எதிர்பார்ப்புகள் நிறைந்திருக்கும் இந்த சமயத்தில் அடுத்த திரைப்படங்களைப் பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.

Most Popular