சினிமா

அஜித் 62வது படத்தின் இயக்குனர், இசை அமைப்பாளர், எடிட்டர் இவர்கள் தான்… ! அப்டேட் எப்போ தெரியுமா ?

AK62

தி ரியல் பொங்கல் வின்னரான அஜித் துணிவு படத்தின் அபார வெற்றிக்குப் பின் தனது 62வது படத்தை துவங்க இருந்தார். அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஒரு வருடம் முன்பே அஜித் அவரைத் தேர்வு செய்துவிட்டார், மேலும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஷூட்டிங்க்கு முன்பே டிஜிட்டல் உரிமத்தையும் பெற்றுவிட்டனர்.

அதோடு நடிகர் சந்தானம் 60 நாட்கள் கால்ஷீட் கூட கொடுத்தார். படத்தின் ஐஷ்வர்யா ராய், அரவிந்த் சுவாமி போன்ற மெகா நட்சத்திரங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அவை அனைத்தையும் ஒரே அடியாக அஜித் தற்போது மூடியுள்ளார். ஒரு வருடம் ஆகியும் விக்னேஷ் சிவன் இன்னும் பேஸ் ஸ்கிரிப்ட் கூட முழுமையாக தயாரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

இதனால் அஜித் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இச்செய்தி இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை ஆனால் தகுந்த வட்டாரங்கள் அதை உறுதி செய்துவிட்டனர். அவரின் இடத்தை நிரப்ப சில இயக்குனர்கள் முன் வந்துள்ளனர். முதலில் முருகதாஸ், விஷ்ணு வர்தன் என வெவ்வேறு செய்திகள் பரவின. உண்மையில் அஜித்குமார் 62வது படத்தை இயக்கப்போவது மகிழ் திருமேனி என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடம், மீகாமன், தடையரைத் தாக்க, கலகத் தலைவன் ஆகிய திரில்லர் திரைப்படங்களை கொடுத்தவர் அஜித்தை இயக்கவுள்ளார். அவரது திறமைக்கு இந்த இடம் கிடைத்தது சற்று தாமதாம் தான். முன்னரே விஜய்யுடன் படம் செய்ய வேண்டியவர் இவர். தற்போது அஜித் கிடைதுள்ளார், அதைச் சரியாக பயன்படுத்தி லோகேஷ் கனகராஜ் போல உயர அனைத்து திறன்களும் கொண்டவர்.

Advertisement

அஜித் 62 படத்தின் இசையமைப்பாளர் இடத்தில் இருந்து அனிருத்தும் விலக, அதை அருண் ராஜ் நிரப்பவுள்ளார். எடிட்டராக என்.பி.ஶ்ரீகாந்த் பணியாற்ற உள்ளார் எனக் கூறப்படுகிறது. மகிழ் திருமேனியுடன் இவர் சென்ற 4 படங்களிலும் எடிட்டராக பணியாற்றியுள்ளார். லோகேஷ் கனகராஜ்க்கு எப்படி பிளோமின் ராஜோ அதே போல் மகிழ் திருமேனிக்கு ஶ்ரீகாந்த். இந்த செய்திகள் அனைத்தும் விரைவில் அதிகபட்சம் பிப்ரவரி 15க்குள் லைகா நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வமாக வெளிவரும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top