சினிமா

அமலா பால் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. தடைப்பட்ட படம் விரைவில் திரையில்

தமிழ் சினிமாவில் கதாநாயகியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து திரைப்படங்களை அமைப்பது மிகவும் சுவாரசியமான ஒன்று. இந்த வகையில் மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் நடிகை அமலாபால். மைனா திரைப்படத்தை அடுத்து நடிகை அமலா பால் நிறைய தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement

மேலும் இவர் சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தான் நடிக்கும் படங்கள் வித்தியாசமான கதை களத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணி ஆடை போன்ற படங்களை நடித்தார். ஆடை திரைப்படத்தில் சில காட்சிகளில் ஆடை இன்றி நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய்,ஜெயம் ரவி தனுஷ் போன்றவர்களுடைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் அவர்களுக்கு கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடிப்பு தனக்கென்று ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்களும் ஒருவராவார்.

Advertisement

இவ்வாறு திரையுலகில் தனக்கென்று ஒரு அங்கீகாரம் கொண்ட அமலாபால் வெறும் நடிகையாக மட்டுமல்லாமல் தற்போது தானே கெடவர் என்ற திரைப்படத்தை தயாரிக்கவும் தொடங்கியிருக்கிறார்.
தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் தானே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் அணு எஸ் பனிக்கர் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் நிழல்கள் ரவி, அதுல்யா ரவி ,ரித்விகா போன்ற பிரபலங்கள் கெடவர் திரைப்படத்தில் அமலா பாலுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு முன் கே ஆர் வினோத் இயக்கத்தில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த அதோ அந்தப் பறவை போல என்ற திரைப்படம் ஏதோ சில காரணங்களால் திரையரங்களின் வெளியாகாமல் தாமதமானது. தற்பொழுது அதோ அந்த பறவை போல படக்குழுவினர்கள் திரைப்படம் வெளியாக இருக்கும் தேதியை அறிவித்துள்ளனர். வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி அது வந்த பறவை போல திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஒரு திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்தப் படத்தில் காண போஸ்டர்களின் அமலாபால் புல்லட் பைக் ஓட்டுவது போன்ற காட்சிகள் உள்ளது.

இன்னும் சில போஸ்டர்களின் அவர் சண்டையிடுவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல வருடங்களுக்குப் பிறகு அமலாபாலின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் காரணமாக அதோ அந்த பறவை போல திரைப்படம் அமலா பாலுக்கு ஒரு ஆக்சன் மற்றும் திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படம் அமலாபாலுக்கு ஒரு சிறந்த கம் பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top