Saturday, May 4, 2024
- Advertisement -
HomeEntertainmentஆணாதிக்க சிந்தனைகள் நிறைந்த படம் தான் ”அனிமல்”.. ஆனால் நாங்கள் படமெடுத்தது.. ரன்பீர் கபூர் அந்தர்...

ஆணாதிக்க சிந்தனைகள் நிறைந்த படம் தான் ”அனிமல்”.. ஆனால் நாங்கள் படமெடுத்தது.. ரன்பீர் கபூர் அந்தர் பல்டி

அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், த்ரிப்டி டாம்ரி, பாபி டியோல் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் அனிமல். தந்தையை கொல்ல முயற்சிக்கும் கும்பலை பழிவாங்க நினைக்கும் மகன், பின்னர் அது தனது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான பிரச்சனை என்று தெரியும். 

- Advertisement -

 பெரியப்பாவின் குடும்பத்திற்கும், தனது தந்தைக்கும் இடையிலான பிரச்சனையை பாபி டியோலை கொன்ற பின், ரன்பீர் கபூர் முடித்து வைப்பார். இந்த படம் ஆணாதிக்க சிந்தனைகள் கொண்ட கருத்துகளுடன் படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் விமர்சனங்களை வைப்பவர்களை ஜோக்கர்ஸ் என்று இயக்குநர் சந்தீப் ரெட்டி காட்டமாக விமர்சித்தார்.

அதுமட்டுமல்லாமல் ஆணாதிக்க சிந்தனைகளை விதந்தோதும் வகையில் படத்தை எடுத்துவிட்டு, படக்குழு சப்பை கட்டு கட்டுவதாக ரசிகர்கள் விமர்சித்தனர். இந்த நிலையில் அனிமல் திரைப்படத்திற்காக நடிகர் ரன்பீர் கபூர் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றார். இந்த விருதுக்கு பின் ரன்பீர் கபூர் பேசும் போது, அனிமல் திரைப்படம் ஆணாதிக்க சிந்தனைகளுடன் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஒரு சினிமா என்பது குறைந்தபட்சம் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும். அப்படியான ஆரோக்கியமான உரையாடலை அனிமல் திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் ஏதாவது தவறு நடந்தால் அதனை பற்றி சினிமாவில் பேசினால் தான் அதனை கொஞ்சம் மாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இத்தனை நாட்களாக அனிமல் திரைப்படம் எந்த ஆணாதிக்க சிந்தனைகளையும் விதைக்கவில்லை என்று கூறி வந்த படக்குழு, தற்போது ரன்பீர் கபூரின் கருத்துக்கு பின் அந்தர் பல்டி அடித்துள்ளது. ஆணாதிக்க சிந்தனைகளின் உருவாகமாகவே விஜய் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது என்று கூறி வருகின்றனர். இதனை தமிழ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Most Popular