Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentD50: தனுசுக்கு தங்கையாக நடிக்கும் துஷாரா விஜயன்… மச்சினிச்சியாக அபர்ணா பாலமுரளி… 500 வீடுகளைக் கொண்ட...

D50: தனுசுக்கு தங்கையாக நடிக்கும் துஷாரா விஜயன்… மச்சினிச்சியாக அபர்ணா பாலமுரளி… 500 வீடுகளைக் கொண்ட பிரம்மாண்டமான செட் ரெடி!

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென்காசி, கடலூர் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது 50வது படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

- Advertisement -

இதில் தனுஷிற்கு சகோதரர்களாக எஸ் ஜே சூர்யா மற்றும் சந்திப் கிஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவனம் ஈர்த்த சந்திப் கிஷன், இந்தப் படத்தில் இணைய இருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

தனது 50 ஆவது படத்தை தனுஷே இயக்குகிறார் என்று அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க வட சென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக இது உருவாக இருக்கிறது. இந்நிலையில் புதிய தகவலாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சந்திப் கிசனுக்கு ஜோடியாக இவர் நடிக்கிறாராம்.

- Advertisement -

தனுசுக்கு தங்கை வேடத்தில் துசாரா விஜயன் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக, சென்னை ஈ சி ஆர் சாலையில் 500 வீடுகளைக் கொண்ட பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாகவும், வரும் ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதற்கான முன்னோட்ட வீடியோவையும் தனுஷ் ரெடி செய்து இருப்பதாகவும், விரைவில் இந்த வீடியோ வெளியாவதை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறதாம். இதற்கான பிரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது சூடு பிடித்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Most Popular