Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாஆள விட்ற சாமி..பார்த்திப்பனிடமிருந்து எஸ்கேப் ஆன ஏஆர் ரஹ்மான்

ஆள விட்ற சாமி..பார்த்திப்பனிடமிருந்து எஸ்கேப் ஆன ஏஆர் ரஹ்மான்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை இயக்குவது முதன்மை வாய்ந்தவர் நடிகர் இயக்குனருமான பார்த்திபன். புரட்சிகரமான திரைப்படங்களை இயக்குவதில் இவர் கைதேர்ந்த இயக்குனர்.

- Advertisement -

இவருடைய நடிப்பை பற்றி ஒருவர் கூறி தெரிய வேண்டும் என்பது இல்லை. அந்த அளவிற்கு சிறந்த நடிகரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானார்.

அதில் தனக்கு கதாநாயகியாக நடித்த சீதாவை பின் காதல் திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இவர் ஏறத்தாழ 15 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதில் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் நடித்த பிரீகீதா, ரோபோ சங்கர், வரலட்சுமி போன்ற நடிகர்களும் மிக அருமையாக நடித்திருந்தார்கள்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தில் ப்ரிகிதா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருப்பார். அது போல் ஒரு சில காட்சிகள் ஆபாசமாக அமைந்திருந்ததால் என் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பார்த்திபன் இயக்கி ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்பொழுது பார்த்திபன் டீன் ஏஜ் என்று சொல்லப்படும் 16, 17 வயது சிறுவர்களுடைய பருவ வயதை கதைக்களமாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு டீன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது இந்த திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானை இசையமைக்க வேண்டும் என்று பார்த்திபன் கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்கு ஏ ஆர் ரகுமான் சார் தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் நான் முடிக்க வேண்டிய வேலைகள் பாக்கி இருக்கிறது.

இந்த முறை உங்களுடைய திட்டத்தை நான் கைவிட வேண்டும். உங்களுடைய கதையைக் கேட்க நான் மிகவும் ஆசைப்படுகிறேன். நீங்கள் மிகவும் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவர் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் காட் பிளஸ் என்று மெயில் அனுப்பி இருக்கிறார்.

இதை பார்த்திபன் தன்னுடையபழகுதல் காதலால் விலகுதலும் காதலால் ஆதலால ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம். இறுதிவரை வரும் படத்திலும் இரு வரும் இணைவோமென நினைத்து இயலாதபோது நண்பர் ஏ ஆர் ஆர் அவர்களிடமிருந்து வந்த மிருது மெயில் என்று கூறி அதற்கு கீழ் ஏ ஆர் ரகுமான் என்னுடைய மெயிலை பதிவிட்டு இருந்தார்.

Most Popular