Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாசாதிக்கு எதிராக இசையால் ஒன்றும் செய்யமுடியவில்லை.. அதற்கு தான் மாமன்னனில் இணைந்தேன்- ஏஆர் ரஹ்மான்

சாதிக்கு எதிராக இசையால் ஒன்றும் செய்யமுடியவில்லை.. அதற்கு தான் மாமன்னனில் இணைந்தேன்- ஏஆர் ரஹ்மான்

இந்த ஆண்டில் இதுவரை வெளியாகி இருக்கும் திரைப்படங்களில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஜெய்லர் முதலிடத்திலும் அதற்கு அடுத்த இடத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது.

- Advertisement -

கடந்த ஜூலை 30ஆம் தேதி வெளிவந்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு வைகை புயல் வடிவேலும் திரைப்படத்தின் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவர் கதாநாயகனாக நடித்த 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் போன்று திரைப்படங்களில் கூட காமெடியனாக தான் பார்த்திருக்கிறோம்.தற்போது உதயநிதிக்கு தந்தையாக ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார்.

- Advertisement -

நடிகர் வடிவேலு இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது அரசியலில் ஜாதியை வைத்து ஏற்றத்தாழ்வுகளை பார்ப்பதை பற்றியே கதைக்களத்தில் அமைந்திருந்தது மாமன்னன் திரைப்படம் .

- Advertisement -

தற்பொழுது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை கடைசி திரைப்படம் மாமன்னன் என்பதால் இத்திரைப்படத்தின் மீது அவர் கூடுதல் கவனம் செலுத்தி நடித்திருந்தார். இதுவரை அவர் நடித்த திரைப்படங்களிலேயே இது அவருக்கு நல்ல பெயரையும் வெற்றியும் தந்த திரைப்படம் என்றும் கூறலாம்.

இத்திரைப்படம் இதுவரை 50 நாட்கள் வரை மேல் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் ஐம்பதாவது நாளுக்கான விழா ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இசை புயல் ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்தை பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசி இருந்தார்.

இத்திரைப்படத்தின் இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான் இத்திரைப்படத்தின் காரணமாகத்தான் இணைந்து இருந்தாராம். இவர் மனதில் ஒரு 20, 30 வருடங்களாகவே ஒரு ஆதங்கம் தீயாக எரிந்து வந்திருக்கிறது. அதுதான் ஜாதி காரணம் காட்டி ஏற்றத்தாழ்வுகளை பார்த்து மனிதர்கள் நடத்துவதை கண்டு எழுந்த கோபம் அதை தன் இசையால் எதுவும் செய்ய முடியவில்லை என்று ஆதங்கம் அவரிடம் இருந்திருக்கிறது.

மாரி செல்வராஜிடம் இந்த கதையைக் கேட்டவுடன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னால் முடியாத காரியத்தை திரைப்படத்தின் மூலம் இவர் செய்ய நினைக்கிறார். இதில் ஆவது நாம் இணைந்து இசையமைப்போம் என்று தான் இதில் இசையமைத்ததாக குறிப்பிட்டு இருந்தார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் .

மேலும் வடிவேலுவின் நடிப்பை ஏ ஆர் ரகுமான் பாராட்டி பேசி இருந்தார் உதயநிதி ஸ்டாலின் உடன் பைக்கில் செல்லும் ஒரு காட்சியை பார்த்து என் கண்ணே கலங்கிவிட்டது என்று ஏ ஆர் ரகுமான் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

Most Popular