நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படும் சூர்யா, பாலாவிடம் எஸ்கேப் ஆன நிலையில் தற்போது முன்னணி நடிகர் சிக்கி உள்ளார்.
இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான நந்தா மற்றும் பிதாமகன் திரைப்படம் சூர்யாவிற்கு ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது இதைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா வணங்கான் என்ற திரைப்படம் நடித்துக் கொண்டிருந்தார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகை கீர்த்தி செட்டி, நடிகர் அதர்வா நடிகை மமீதா பைஜு ஆகியோர் நடித்து வந்தார்கள். இந்தத் திரைப்படத்திற்கு இயக்குனர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருந்தார் என்று பல தகவல்கள் வணங்கான் திரைப்படத்தைப் பற்றி வெளியாகி வந்தது சில காலம் இந்த திரைப்படத்தைப் பற்றிய எந்தவிதமான அப்டேட்ஸ்களும் வெளிவரவில்லை.
தற்பொழுது இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யா ஆகியோருக்கு இடையில் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் இந்த திரைப்படத்தில் இதற்கு மேல் நடிகர் சூர்யா நடிக்கப் போவது இல்லை என்று திரைப்படத்தை விட்டு விலகி உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் இயக்குனர் பாலா அளித்துள்ள விளக்கத்தில், நான் இப்பொழுது கதையை மாற்றி விட்டேன். இதில் சூர்யா நடிப்பது பொருத்தமாக இருக்காது என்பதால் நாங்கள் சூர்யாவை விலக்கி விட்டோம் என்று கூறி வருகிறார்.
நடிகர் சூர்யா உடைய ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. காரணம் மாஸ் ஹீரோவான சூர்யா தற்போது பாலா படத்தில் நடித்த அது சரியாக இருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர் மேலும் பாலா தனது ஹீரோவுக்கு இந்த அடியை வைத்து பழைய சட்டையை போட்டு ஹீரோவுக்கான அந்தஸ்தையும் இல்லாமல் படத்தை முடித்து விடுவார் மேலும் கதையில் ஏதாவது மாற்றம் செய்யுங்கள் என்று சொன்னாலும் ஏற்க மாட்டார். இதனாலே பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த அர்ஜூன் ரெட்டி ரிமேக் படத்தை கைவிட்டு, மீண்டும் வேறு இயக்குனரை வைத்து படத்தை எடுத்தனர்.
அதேபோல் இயக்குனர் பாலா இயக்கி வரும் இந்த வனங்கான் திரைப்படத்திற்கு சூர்யா விலக்கப்பட்டதால் அந்த இடத்திற்கு கதாநாயகன் ஆக நடிகர் அருண் விஜய் நடிக்க இருப்பதான தகவலும் வெளியாகி உள்ளது. நடிகர் அருண் விஜய் நடிக்க இருக்கும் அந்த வணங்கான் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் 2023 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதான தகவலும் வெளியாகி இருக்கிறது.