Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentஞானவேல் படத்துக்கு வெறும் 50 நாட்களே கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந்த்... அடுத்ததா லோகேஷ் படத்துல ஸ்பெஷல்...

ஞானவேல் படத்துக்கு வெறும் 50 நாட்களே கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந்த்… அடுத்ததா லோகேஷ் படத்துல ஸ்பெஷல் அப்டேட் வேற இருக்காம்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் மற்றும் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் ஜெயிலர் திரைப்படம் வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின்

- Advertisement -

டிரைலர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படம் திரையரங்குகளில் வெளியாவதால் அவருடைய ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதனிடையே ரஜினியின் 170 வது படத்தை ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

ஜெய்பீமை போன்றே இந்த படத்தையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தான் எடுக்கிறாராம் ஞானவேல். அந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் ரஜினி. போலீசார் நடத்தும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் நபராக நடிக்கிறாராம

ரஜினிகாந்த் – ஞானவேல் இணையும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து தெலுங்கு நடிகர் நானி, மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோரும் ரஜினியின் 170 வது படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக ரஜினிகாந்த் மொத்தம் 50 நாட்கள் மட்டுமே கால் ஷீட் கொடுத்திருக்கிறாராம். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அவர் ஞானவேல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து நவம்பர் மாதமே, அவர் லோகேஷ் கனகராஜ் உடனான படத்தில் இணைவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங், நவம்பரில் தொடங்கி பிப்ரவரி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது

- Advertisement -

Most Popular