Wednesday, May 15, 2024
- Advertisement -
Homeசினிமாஅட்லீ செய்த மாஸ் சம்பவம்.. தெறிக்கவிட்ட ஜவான் டிரைலர்

அட்லீ செய்த மாஸ் சம்பவம்.. தெறிக்கவிட்ட ஜவான் டிரைலர்

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக குறுகிய காலகட்டத்தில் வளர்ந்தவர் தான் அட்லி. ராஜா ராணி திரைப்படம் மூலம் முதல் படத்திலேயே மிகப்பெரிய பெற்றார்.

- Advertisement -

ஆர்யா நடித்த இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு தளபதி விஜய் உடன் இணைந்து தெறி,மெர்சல், பிகில் என்று தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார்.

இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை இதுவரை திரும்பி பார்த்தது நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய காரணமாகவும் அட்லீ இருந்தார். இதன்பிறகு நடிகர் அட்லிக்கு பாலிவுட் வாய்ப்பு தேடி வந்தது. நடிகர் ஷாருக்கானும் அப்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து தோல்வி படங்களை நடித்து வந்ததால் அவர் தன்னுடைய நம்பிக்கையை அட்லி மீது வைத்தார்.

- Advertisement -

இதற்கிடையில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.கொரோனாவால் தாமதமான ஜவான் திரைப்படம் மீண்டும் தொடங்கியது. இதில் விஜய் சேதுபதி, பிரியாமணி, நயன்தாரா, தீபிகா படுகோன் என தென்னிந்திய பட்டாளமே நடித்திருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று ரிலீஸ் ஆனது. இதில் பாலிவுட் சினிமாவுக்கு ஒரு வித்தியாசமான விருந்தை இயக்குனர் அட்லி கொடுத்திருக்கிறார். ஷாருக்கான் மாஸ் மற்றும் கிளாஸ் நடிகராக இந்த ட்ரெய்லரில் அட்லி காத்திருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக ஷாருக்கான் பல்வேறு தோற்றங்களில் இந்த படத்தில் வருகிறார். மேலும் மெர்சல் படத்தின் விஜய் இரண்டு கைகளை தட்டுவது போல் ஷாருக்கானும் ஜவான் படத்தில் செய்கிறார்.

இந்தப் படத்தை ட்ரைலரை பார்த்துவிட்டு மிரண்டு போன பாலிவுட் ரசிகர்கள். இது நிச்சயமாக மிகப்பெரிய ஹிட் அடையும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் ரசிகர்களும் அட்லியின் இந்த படத்தை திரண்டு செய்து வருகிறார்கள்.

Most Popular