Tuesday, May 14, 2024
- Advertisement -
Homeசினிமாதனுஷ் உடன் மோதுவது உறுதி.. இசை வெளியிட்டு விழாவிற்கு தயாராகும் அயலான்.. விழா எப்போது?

தனுஷ் உடன் மோதுவது உறுதி.. இசை வெளியிட்டு விழாவிற்கு தயாராகும் அயலான்.. விழா எப்போது?

2016 ஆம் ஆண்டு அயலான் என்ற திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. மேலும் அந்தத் திரைப்படத்தில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கதாநாயகியாக நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இத்திரைப்படம் ஏறத்தாழ ஏழு எட்டு வருடங்களாக பல காரணங்களால் வெளியிடப்படாமலேயே முடங்கி கிடந்தது.

- Advertisement -

இத்திரைப்படம் எடுக்கப் போவதாக கூறிய பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் ,சீம ராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் ,பிரின்ஸ்,மாவீரன் என்று நிறைய திரைப்படங்களை நடித்து திரைப்படங்களும் வெளியிடப்பட்டது.

வருகின்ற ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படலாம் என்று படக்குழுவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது இந்த தகவலை உறுதி செய்யும் விதமாகவும் மேலும் ஒரு சந்தோஷத்தை ரசிகர்களுக்கு தரும் விதமாகவும் படக் குழுவினர்கள் ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் என்ற பைவ் ஸ்டார் ஹோட்டலில் இத்திரைப்படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவை நடத்த போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் சுவாரசியமான நிகழ்வு என்னவென்றால் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனமே கிடைத்தது.ஆனால் இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கும் இந்த அயலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இப்படி ஒரு தகவல் வெளியானது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Most Popular