Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentஇனி பேபி சாரா இல்ல.. ஹீரோயின் சாரா.. மீண்டும் அறிமுகம் செய்யும் ஏஎல் விஜய்.. நாயகன்...

இனி பேபி சாரா இல்ல.. ஹீரோயின் சாரா.. மீண்டும் அறிமுகம் செய்யும் ஏஎல் விஜய்.. நாயகன் யார்?

ஏஎல் விஜய் – விக்ரம் கூட்டணியில் வெளியாகிய தெய்வத் திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா. சிறு குழந்தையாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஒவ்வொரு வீட்டிலும் செல்லப் பிள்ளையாக மாறிவிட்டார். ஒரு கட்டத்தில் சாராவை பலரும் விக்ரமின் சொந்த மகள் என்று பலரும் நினைக்க தொடங்கினர்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் நந்தினி

இதன்பின் மீண்டும் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான சைவம் படத்தில் சாரா முதன்மை கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அதன்பின் சினிமாவில் இருந்து விலகிய சாரா, திடீரென பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா ராயின் குழந்தை பருவத்தில் நடித்த சாரா, தெய்வீக அழகுடன் காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சாராவை இன்ஸ்டாகிராமில் தேட தொடங்கினர். நந்தினி கதாபாத்திரத்திற்கு ஏற்ப அழகுடனும், மிடுக்குடனும் சாரா தோன்றி ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

நாயகியாக சாரா அறிமுகம்

இதனால் சாரா விரைவில் நாயகியாக அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் சாரா நடித்துவிட்டார். கொட்டேஷன் கேங் என்ற படத்தில் நடித்த சாரா புகைப்பிடிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தைப் பார்த்த பலர் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

- Advertisement -

ஏஎல் விஜய் பேட்டி

இந்த படத்தில் பிரியாமணி, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், விவேக் கண்ணன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் ஏஎல் விஜய் இயக்கத்தில் சாரா நாயகியாக அறிமுகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஏஎல் விஜய் பேசும்போது, பேபி சாரா இனி நாயகி சாராவாக உயர்ந்துவிட்டார். பொன்னியின் செல்வனில் மணிரத்னம் தெய்வீக அழகுடன் காட்சிப்படுத்திவிட்டார்.

இதனால் சாரா இனி நாயகியாக நடிக்க எந்த தடையும் இல்லை. 2025ஆம் ஆண்டு தொடங்கவுள்ள எனது படத்தில் சாராவை நாயகியாக அறிமுகம் செய்ய உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் முதல் படிப்படியாக நாயகி ஸ்தானத்திற்கு சென்றுள்ள சாரா, விரைவில் வெள்ளித்திரையையும் ஆக்கிரமிக்கவுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular