சினிமா

ஹிந்தி பிக் பாஸுக்கு சவால் விடும் தமிழ் பிக் பாஸ் செட்!! பிரம்மாண்டம்னா இதான்; கசிந்த புகைப்படங்கள் உள்ளே..

தமிழில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதிக ரசிகர்களை கொண்ட பிக் பாஸ் ஐந்து சீசன்களை வெற்றிகரமாக முடித்து, தற்போது ஆறாவது சீசனில் காலடி எடுத்து வைக்க உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் பிரபலமானது. அங்கு 10 சீசங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அதன்பிறகு, தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வெளிநாட்டில் மிகவும் வெற்றிகரமாக இருந்த பிக் பிரதர் என்ற நிகழ்ச்சி தான் இந்தியாவில் பிக் பாஸ் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் இன்னும் பிரபலமாக முக்கிய காரணம் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது தான். அனைத்து மொழிகளிலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

Advertisement

கமல்ஹாசன் ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கிய போதிலும் ஓடிடி தளத்தில் வெளியான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே விலகினார். ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் நடிக்க இருப்பதாக கூறி விலகினார் . மேலும் இவரை அடுத்து யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸில் அனைவராலும் கவரப்படும் ஒன்று பிக் பாஸ் வீடு அமைப்புதான். அதை எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு பலரும் ஆர்வமுடன் எதிர்பார்ப்பர். ஆறாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. இதற்க்கான செட் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டுவருகிறது. வருடா வருடம் செட் அமைக்கும் பணியில் ஒரு புதுமையை காட்டி வருகின்றனர்.

Advertisement

மேலும் இந்நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி தொகுப்பாளரான ரக்சன், தர்ஷா குப்தா, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, தொகுப்பாளினி டிடி, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சின்னதிரை நடிகை ஸ்ரீநிதி, காமெடி நடிகர் மதுரை முத்து, யூடியுப் பிரபலம் ஜி பி முத்து ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக யூடியூப் தளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் சில நாட்களாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் ப்ரோமோ ஒளிபரப்பப்பட்டு வருகிறது இதன் மூலம் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்பதை உறுதி செய்யலாம்.மேலும் அவர் விலங்குகள் மற்றும் காடுகள் பற்றி பேசியது பிக் பாஸ் வீடு பற்றிய மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. செட் அதைசார்ந்து இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.

பிக் பாஸ் 6 வீடு பற்றிய புகைப்படங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top