Friday, April 26, 2024
- Advertisement -
Homeசெய்திகள்பிக் பாஸ் சீசன் 7 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் யார்?

பிக் பாஸ் சீசன் 7 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் யார்?

தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கு உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் ஷோ என்றால் அது பிக் பாஸ்  தான். ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்கி பல டாஸ்க்களை செய்து வெற்றி பெற வேண்டும் என்பதை இந்த சோவின் அம்சமாகும்.

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல தரப்பிலிருந்து ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் நடிகர் கமலஹாசன் யார் என்று 2 கே கட்சிகளுக்கு தெரிய வந்தது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பல சர்ச்சைகளை சந்தித்தாலும் சில சீசன்கள் மக்களிடையே சரியாக கொண்டாடப்படாமல் போனது.

- Advertisement -

இந்த நிலையில் ஏழாவது சீசனில் ப்ரோமோ நேற்று விஜய் தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆனது. இதனால் இந்த நிகழ்ச்சி ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இம்மாதம் இறுதியில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படும் என தெரிகிறது.

- Advertisement -

இந்த நிலையில் நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் பங்கு பெறப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்த நடிகர் அப்பாஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.

நடிகர் அப்பாஸ் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரின் அழைப்பில் அப்பாஸ் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்திருக்கிறார். இதேபோன்று தான் நடிகர் கமலஹாசனின் தீவிர ரசிகர் என்று சொல்லப்படும் மணிகண்டன் இந்த நிகழ்ச்சியில் இணைய வாய்ப்பு இருக்கிறது.

பல குரலில் பேசி அசத்திய மணிகண்டன் குட் நைட் திரைப்படம் மூலம் நல்ல பெயரை பெற்றிருக்கிறார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அந்த பெயரை காப்பாற்றுவாரா இல்லை கெடுத்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதைப் போன்று நடிகை சிம்ரன், மீரா ஜாஸ்மின் ஆகியோரிடமும் இந்த போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான திவ்யதர்ஷினிக்கும் இந்த நிகழ்ச்சிகள் பங்கு பெற அழைப்பு வந்திருக்கிறது. இதேபோன்று நடிகை திவ்யா துரைசாமி பிக் பாஸில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular