Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாபிக் பாஸ்க்கு வருங்கீளா? ஆள விடுங்கடா சாமி என ஓடும் நடிகைகள்

பிக் பாஸ்க்கு வருங்கீளா? ஆள விடுங்கடா சாமி என ஓடும் நடிகைகள்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறு சீசர்கள் வரை வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் ஏழாவது சீசனுக்கு விஜய் தொலைக்காட்சி நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.

- Advertisement -

ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சி நடத்துவதில் மிகப்பெரிய சிக்கல் ஒன்று ஏற்பட்டிருக்கிறதாம். காரணம் ஐந்தாவது பிக் பாஸ் சீசன் பெருமளவு வெற்றியை பெறவில்லை.

இதற்காக ஆறாவது சீசன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் போட்டியாளர்கள் பங்கேற்று அது நல்ல வரவேற்பு பெற்றது. எனினும் பிக் பாஸில் பங்கேற்றால் மக்களிடம் இருக்கும் நன்மதிப்பும் போய்விடும் என்ற பயம் தற்போது பல நட்சத்திரங்கள் இடையே ஏற்பட்டு இருக்கிறதாம்.

- Advertisement -

மேலும் பிக் பாஸில் பங்கேற்று வெளிய வந்தவர்கள் யாரும் சினிமா உலகில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் அது ராசி இல்லாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் நட்சத்திரங்களின் கேரக்டர் மற்றும் அவர்கள் நடவடிக்கைகள் என அனைத்தும் மக்களிடையே தவறாக புரிந்து கொள்ளப்படுவதால் அவர்களுடைய கேரியரே நாசமாகி போகிறது.

இப்படி தான் பி வாசுவின் மகனான சக்தி தற்போது சினிமாவிலிருந்து பிக் பாஸ் சீசனில் பகங்கேற்ற பிறகு ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். இது போன்ற நிலைமை தங்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நிறைய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நோ சொல்லிவிட்டார்களாம்.

அதேசமயம் வாய்ப்புக்காகவும் தொலைக்காட்சியில் நமது முகம் தெரிய வேண்டும் என்று போராடும் பல பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆனால் முகம் தெரியாத பலருக்கு வாய்ப்பு வழங்கினால் பிக் பாஸ் சீசன் தோல்வியில் முடிவடைந்து விடும் என விஜய் டிவி நிறுவனமும் பிக் பாஸை நடத்தும் நிறுவனமும் யோசிக்கிறதாம்.

மேலும் நடிகர் கமல்ஹாசனின் பெயரும் சில சமயம் பிக் பாஸில் ஒரு தலைப்பட்சமாக நடப்பதாக கெடுகிறது.இதனால் அவரும் இனி இந்த சீசன்களில் தொகுத்து வழங்க தயக்கம் காட்டுகிறாராம்.

Most Popular