தமிழ் சினிமாவின் மிகவும் முக்கிய திரைப்பட நிறுவனமாக ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் விளங்குகிறது. அதிமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக ரெட் ஜெய்ண்டஸ் நிறுவனம் எந்தப் படத்தையும் வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் பல படங்களை வாங்கி வெளியிடுகிறது.
எனினும் ரெட் ஜெயின்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுவதிலும் லாபத்தை பகிர்ந்து வழங்குவதிலும் எந்த குறையும் வைக்காமல் சிறப்பாக செயல்படுவதாக திரைப்படத்துறை பாராட்டி வருகிறது. குறிப்பாக அரசியலில் திமுகவுக்கு எதிராக நிற்கும் கமல் கூட தன்னுடைய விக்ரம் திரைப்படத்தை நிறுவனம் மூலம் வெளியிட்டார். அப்போது ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் லாபத்தை பகிர்ந்து வழங்குவதில் சரியாக நடந்து கொள்கிறார்கள். சினிமாவில் இப்படி நியாயமாக இருக்கும் ஆட்கள் மிகவும் குறைவு. ரெட் ஜெய்ண்ட்ஸ் போன்ற நிறுவனம் தமிழ் சினிமாவிற்கு தேவை என்று பாராட்டினார்.
உதயநிதி ஸ்டாலினே பல பேட்டியில் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் ஆட்சியில் இருப்பதால் அனைத்து படங்களையும் வாங்கி வெளியிடுகிறோம் என்று தோன்றலாம். ஆனால் திரைப்படத் துறை சேர்ந்த கலைஞர்கள் தான் உங்கள் பேனரில் எங்கள் படத்தை வெளியிடுங்கள் என்று வற்புறுத்துகிறார்கள். இதனால் தான் ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் இந்த படங்களை வெளியிடுகிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார். இதனை அடுத்து ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் போஸ்டரில் எதிலும் தனது பெயர் இடம் பெறக் கூடாது என்று கூறியுள்ளார். இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களில் வெளியான அனைத்து ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவன போஸ்டர், வீடியோக்களில் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் என்ற பெயர் இடம் பெறாமல் ரிலீஸ் ஆகிறது. அமைச்சராகி விட்டதால் சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் முடிவை உதயநிதி ஸ்டாலின் எடுத்திருக்கிறார். இதனால் இந்த நிறுவனம் வேறு ஒரு நபரால் நிர்வகிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.