நேற்று சென்னையில் நடந்த லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லால் சலாம் திரைப்படத்தில் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய என் தந்தை சங்கீ இல்லை என்று உணர்ச்சி பொங்க பேசினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
அவ்வாறு அவர் பேசியதை வஞ்சப்புகழ்ச்சியில் வச்சு செய்து விட்டார் ப்ளூ சட்டை மாறன். டிமோனி நேசன் வந்தபோது ஹாட்ஸ் ஆப் மோடி ஜி என்று பாராட்டினார் மோடியும் அமிர்தாவும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனர் என்றார்.
பத்மபூஷன் தாதா சஹப் பால்கோ விருதுகளை மோடிஜி ஆட்சியில் தான் வாங்கியதாக குறிப்பிட்டார்.தான் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அதில் தாமரையை சின்னமாக வைத்து கடும் எதிர்ப்புக்கு ஆளாகி தாமரைச் சின்னத்தை நீக்கினார்.
கபாலி, காலா இப்பொழுது லால் சலாம் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்தது தலித் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவை பெறுவதற்கு தான் நடித்தார்.
பாஜக இந்துத்துவ ஆதரவாளரான துக்ளக் மூர்த்தி அர்ஜுன மூர்த்தி ஆகியோரை கலந்து ஆலோசித்து தான் அரசியல் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுத்தார்.மேலும் துக்ளக் படிப்போருக்கு தான் மூளை அதிகம் என்றும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
உலக அரசியல் இல்லாத ஆன்மீக அரசியல் எனும் தத்துவத்தை தான் இதுவரை கடைபிடித்து இருக்கிறார்.
ஒட்டுமொத்த நாடும் கொந்தளித்த மணிப்பூர் கலவரத்தின் போது எதைப்பற்றியும் கருத்து கூறாமல் அமைதியாக இருந்தார் மாமிசம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு என்று கூறினார்.
போராடிய மக்களை சமூக விரோதிகள் என்றார் திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் பிரசித்து பெற்ற சித்தர்கள் இருந்தும் உப்பிக்கு சென்று யோகி ஆதித்யநாத் காலில் தான் விழுந்து வணங்கினார்.
இன்னும் ஒரு படி மேலே சென்று ராமர் கோவிலுக்கு அழைப்பு வந்ததும் முதல் ஆளாக சென்று முதல் வரிசையில் அமர்ந்து மோடிக்கு கும்பிடு போட்டார். இப்படி எல்லாம் பல சாகசங்களை செய்திருக்கிறார் இனியும் செய்வார். ஆனால் இவர் சங்கி இல்லை என்று ப்ளூ சட்டை மாறன் கூறி இருக்கிறார்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் வெற்றி அடைவதற்காக தான் இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.