Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் ஸ்கோர் பண்ணிட்டாரு.. பஜன்லால் சேட்டு ஒரு போட்டோ போடுவாரே.. ஏன் லேட்? - ப்ளூ...

விஜய் ஸ்கோர் பண்ணிட்டாரு.. பஜன்லால் சேட்டு ஒரு போட்டோ போடுவாரே.. ஏன் லேட்? – ப்ளூ சட்டை மாறன் தாக்கு

தளபதி விஜய் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி அவர்களுடன் 12 மணி நேரம் வரை மேடையில் செலவிட்டது ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்றுவிட்டது. இதில் பலரும் நடிகர் விஜயின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஜயின் இந்த செயலை விமர்சித்தும் நடிகர் அஜித்தை கிண்டல் செய்யும் விதமாக பிரபல யூட்யூபர் ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

- Advertisement -

அதில் நடிகர் விஜய் கமாண்டர் என்றும் நடிகர் அஜித்தை பெயரை குறிப்பிடாமல் பஜன்லால் சேட்டு என்றும் விமர்சித்திருக்கிறார். இதில் நடிகர் விஜய் எப்போதெல்லாம் ஸ்கோர் செய்கிறாரோ அப்போதெல்லாம் பஜென் லால் சேட்டிடமிருந்து ஒரு போட்டோ வருமே.

- Advertisement -

இன்று ஏன் வரவில்லை? ஏன் இன்னும் தாமதம் என்று அவர் கிண்டல் செய்து இருக்கிறார். விஜய் படம் அல்லது விஜய் பற்றி ஏதேனும் செய்திகள் வந்தால் மறுநாளே அஜித் தரப்பிடமிருந்து அஜித் அதை செய்தார். அஜித்திடம் ரசிகர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர் என்ற போன்ற பல செய்திகள் வெளி வரத் தொடங்கும்.

இதனை விமர்சிக்கும் விதமாக அவர் இந்த பதிவை போட்டுள்ளார். மேலும் நடிகர் விஜயும் கிண்டல் செய்யும் விதமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஆபத்து என்று கேள்வி கேட்டு அதற்கு நான்கு பதில் கொடுத்திருந்தார்.

அதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜய் என ஆப்ஷனை அவர் கொடுத்திருந்தார். இதில் ரசிகர்கள் சிலர் நடிகர் விஜய்க்கு தான் ஆபத்து என்று வாக்களித்து இருந்தார்கள்.

மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி நடிகர்கள் தங்களுடைய படத்தை ரிலீஸ் போது கட்அவுட் வைக்காமல் திரையரங்கில் டிக்கெட் விலையை அதிகப்படுத்தாமல் இருப்பதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ப்ளூ சட்டை மாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Most Popular