இளைய தளபதி விஜய் 2026ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் என பல கணிப்புகள் உள்ளன. அதற்க்கு ஏற்பது போலத் தான் அவரின் ஒவ்வொரு அசைவும் உள்ளது. அவரது அரசியல் ஆசைக்கு பல்வேறு டிரோல்கள் வழக்கம் போல வந்துள்ளன. இன்று விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன் டிவிட்டர் பக்கத்தில் அது குறித்து பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் சர்கார் படத்தின் முதலே மேடையில் அரசியல் பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும் மறைமுகமாக தாக்குவார். ரஜினியைப் போல வெறும் வாய் உதாரு தான் எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. கடந்த சில மாதங்களாக தன் மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு முயற்சிகளை விஜய் செய்து வருகிறார்.
லியோ ஷூட்டிங்க்கு இடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடத்தினார். சுமார் 12 மணி நேரம் நின்றுக் கொண்டு சேவை செய்த விஜய்யிக்கு மக்கள் இடையே பெரிய வரவேற்பு. அடுத்தடுத்து அவரது இயக்க உறுப்பினர்களை அந்தந்த ஏரியாவில் நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
முக்கிய நிர்வாகிகளுடன் அவ்வப்போது சந்தித்து பேசுகிறார். அண்மையில் லியோ வெற்றி விழாவில் கூட 2026 என சூசமகமா தன் அரசியல் விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது அவர் வெங்கட் பிரஞ்சு இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 68 படத்திற்குப் பிறகு படங்கள் நடிக்காமல் 2026 அரசியல் பணிகளை துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தன் நலத் திட்ட்டங்களின் அடுத்தப் படியாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் தளபதி விஜய் நூலகத்தை அமைத்துள்ளார். இதனை புஸ்ஸி ஆனந்த் திறந்து வைக்கிறார். வருகின்றன நவம்பர் 23ஆம் தேதி இத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளனர். இந்த செயலுக்குத் தான் ப்ளூ சட்டை மாறன் டுவீட் மூலம் நக்கல் செய்துள்ளார்.
அவர் பதிவிட்டிருபதாவது, “ அரசியல் களத்திற்கு வருவதற்கு முன்பே அரசாங்கம் நடத்தி வருகிறாரா விஜய் ? ” என பதிவிட்டுள்ளார். எப்போதும் சினிமா வட்டாரங்களில் வம்பு இழுத்து அதில் ட்ரெண்ட் ஆவது இவருக்கு வழக்கம் ஆகிவிட்டது. அது மட்டுமில்லாமல் விஜய்க்கு எதிரானவர்கள், “ திமுக அண்மையில் மதுரையில் திறந்த நூலகத்தைப் பார்த்து தான் விஜய் காப்பி அடிக்கிறார் ” என சம்மந்தமே இல்லாமல் கலாய்கின்றனர்.