சினிமா

அஜித்குமார் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் தேதி அறிவிப்பு ! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ள போனி கபூர் !

AK61 Boney Kapoor and Ajithkumar

ஹெச்.வினோத் இயக்கும் நடிகர் அஜித்குமாரின் 61வது படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்தக் கூட்டணி நேர்க்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து செயல்படுகிறது. கொரோனா காலக்கட்டத்தில் படக்குழு எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காததால் அந்த திரைப்படத்தின் அப்டேட்க்கு ஏங்கி, ரசிகர்கள் எங்கு சென்றாலும் அதைப் பற்றி பேசி வலிமை அப்டேட்டை உலகெங்கும் கொண்டு சேர்த்து பிரபலமாக்கினர்.

பட வேலைகள் எல்லாம் முடிந்து பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியாகியது. படத்தின் திரைக்கதை எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் சண்டைக் காட்சிகளில் மிரட்டிவிட்டனர். வர்த்தக ரீதியாக பெரிய லாபத்தை சம்பாரித்தது. நடிகர் அஜித்குமார் அவர்கள் தன் பணியை முடித்துவிட்டு ஷூட்டிங் இடையே வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு “ வாழா என் வாழ்வை வாழவே ” என்ற வாக்கியதற்கு இணங்க வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் அவரைப் போல நன்கு சம்பாதித்து விட்டு உலகத்தை சுற்ற வேண்டும் என்று சமூக வலைதில் பதிவிட்டனர்.

Advertisement

‘ ஏ.கே 61 ‘ என்றழைக்கப்படும் இப்படத்தின் ஷூட்டிங் அனைத்தும் ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறவுள்ளது. தற்போது ரசிகர்கள் அனைவரது கவனமும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் மீது உள்ளது. மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஶ்ரீதேவியின் விருப்பத்திற்கு இணங்க அஜித்குமார் நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடிக்க முடிவெடுத்தார். அதேக் கூட்டணி மறுபடியும் இணைந்து ‘ வலிமை ‘ எனும் வெற்றிப்படத்தை கொடுத்தது. மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணி இம்முறை மிகப் பெரிய வசூலை எண்ணி சிறப்பான படத்தை உருவாக்கி வருகிறது.

ராட்ச்சன் படத்திற்கு இசையமைத்து மெய்சிலிர்க்க வைத்த ஜிப்ரான் இந்த படத்திற்கான இசையமைப்பு வேளைகளைப் பார்க்கிறார். முந்தையப் படத்தை போல இல்லாமல் இம்முறை எந்த ஒரு பாட்டும், சென்டிமென்ட் காட்டிசிகளும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் வங்கிக் கொள்ளை பற்றிய கதையாக அமைந்துள்ளது. நடிகர் அஜித்குமார் கோட் சூட் அணிந்து காதில் கடுக்கு மாட்டிக் கொண்டு தாடியுடன் மிரட்டலான லுக்கில் உள்ளார். மேலும் மங்காத்தா, வாலி போன்ற படங்களைப் போல இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்றும் என செய்திகள் வெளிவந்துள்ளன. ரசிகர்கள் அனைவரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top