Friday, May 17, 2024
- Advertisement -
Homeசினிமாதயாரிப்பாளரிடம் இந்த இரு படங்களுக்கும் ஹீரோவாக நடிக்கலாமா? -என்று கேட்ட நடிகர் அஸ்வின் குமார்

தயாரிப்பாளரிடம் இந்த இரு படங்களுக்கும் ஹீரோவாக நடிக்கலாமா? -என்று கேட்ட நடிகர் அஸ்வின் குமார்

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெண் ரசிகைகள் அனைவரையும் தன்வசப்படுத்தியவர் நடிகர் அஸ்வின் குமார். இவர் நடிகராக அறிமுகமான “என்ன சொல்லப் போகிறாய்” என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இவர் பேசிய பேச்சுக்கள் சர்ச்சைகளைக் கிளப்பினர் அதனால் இவருக்கான பட வாய்ப்பு அடுத்தடுத்து குறைந்து போனது.

- Advertisement -

இறுதியாக இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய செம்பி திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் இவருக்கான வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு அவரின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் இன்றுடன் 50 நாட்களுக்கு கடந்து வெற்றி படமாக ஓடிக் கொண்டிருக்கும் அயோத்தி திரைப்படத்தின் ஐம்பதாவது நாள் விழாவில் அயோத்தி படத்தில் நடிகர் சசிகுமார் நடித்த வேடத்தில் நான் நடிக்க முடியுமா என்று தயாரிப்பாளரிடம் கேட்டதாக அஸ்வின் குமார் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஸ்வின் குமார் பேசும்போது “ செம்பி படத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம், எனது தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி. எனது முதல் படத்தை இவ்வளவு அக்கறையுடன் தயாரித்த அவர், எனது இரண்டாவது படத்திற்கும் அவர்தான் தயாரிப்பாளர். உனக்கு படத்தில் நடிக்க விருப்பமா என்று அவர் கேட்டபோது, ​​இயக்குனர் பிரபு சாலமன் சார் என்ற பெயரைக் கேட்டதும் நான் உடனே “ஆம்” என்று தலையசைத்தேன்” என்று பேசினார்.

- Advertisement -

மேலும் அவர் பேசும்போது” “நான் பிரபு சாலமன் சாரைச் சந்தித்தபோது ஒரே ஒரு கேள்வியைக் கேட்டேன், அதில் என்னை நடிக்க வைக்க அவர் “சரி” என்று நினைக்கிறாரா என்பதுதான். தனது படத்தில் ஒரு கேரக்டரில் நடிப்பது ஒரு வரப்பிரசாதம்” என்று பேசி இருந்தார்.

- Advertisement -

மேலும் அவர் அயோத்தி திரைப்படம் பற்றி பேசும் போது “அயோத்தி படத்தின் கதையைக் கேட்டதும், ரவீந்தர் சாரிடம், இந்தப் படத்திலும் நான் கதாநாயகனாக நடிக்கலாமா என்று கேட்டேன். ஆனால் சசிகுமார் சார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த பாத்திரத்தில் நடிக்க மிகவும் தகுதியானவர் அவர்தான். செம்பி மற்றும் அயோத்தி படங்களின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் நடந்தது, எங்கள் தயாரிப்பாளர் இரண்டு செட்களையும் பார்வையிட்டு கடுமையாக உழைத்தார்” என்று அஷ்வின் குமார் பேசினார்.

அயோத்தி மற்றும் செம்பி திரை படங்களுக்கு ஒரே தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Most Popular