Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஅயலான், கேப்டன் மில்லர், குண்டூர் காரம்.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் எவை? எந்த...

அயலான், கேப்டன் மில்லர், குண்டூர் காரம்.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் எவை? எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் படங்கள் வெளியானாலும் ஓடிடி-யில் என்ன திரைப்படம், என்ன வெப் சீரிஸ் வருகிறது என்பதை ரசிகர்கள் ஆர்வமாக கண்காணித்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சினிமாக்களில் 30 நாட்களுக்கு பின்னரும், பாலிவுட் படங்களில் 7 வாரங்களுக்கு பின்னரும் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.’

- Advertisement -

நாளை மறுநாள் தமிழ் சினிமாவிஒல் இருந்து தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியது. பொங்கலுக்கு வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தனுஷின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. அதேபோல் ஓடிடியில் பார்க்க பலரும் ஆவலாக இருக்கின்றனர். 

அதேபோல் பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி ரூ.70 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம், குழந்தைகளுக்கான படமாக கொண்டாடப்பட்டது. இதனால் குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து ஓடிடியில் பார்ப்பதற்கு ஏதுவான படம் அயலான். 

- Advertisement -

அதேபோல் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் திரைப்படம் ரசிகர்களிடையே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. வசூலிலும் படுதோல்வியடைந்த இந்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளதால், படத்தை தமிழ் ரசிகர்கள் கொத்து கறி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- Advertisement -

அதேபோல் ஆஹா ஓடிடி தளத்தில் பரத் – ஜனனி நடித்துள்ள இப்படிக்கு காதல் வெளியாகவுள்ளது. அதேபோல் ஜீ5 ஓடிடி தளத்தில் காட்டேரா படமும், பக்ஹக் என்ற பாலிவுட் படமும் ரிலீஸாகவுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஜியோ சினிமாவில் நன் 2 மற்றும் எக்சார்சிஸ்ட் ஆகிய பேய் படங்கள் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular