Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாகேப்டன் மில்லர் கிளைமாக்ஸ் காட்சி நான்கு நிமிடம் நீக்கம் தனுஷ் ரசிகர்கள் சோகம்

கேப்டன் மில்லர் கிளைமாக்ஸ் காட்சி நான்கு நிமிடம் நீக்கம் தனுஷ் ரசிகர்கள் சோகம்

நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது.

- Advertisement -

திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணியில் படக்குழுவினர்கள் ஆர்வம் காட்டி வரும் இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு யூ.ஏ சர்டிபிகேட் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. யூ ஏ சர்டிபிகேட் கிடைப்பதற்கு நான்கு நிமிட காட்சியை திரைப்படத்திலிருந்து நீக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது

அதைப் பற்றி இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

அந்த நான்கு நிமிட காட்சியை நீக்காமல் இருந்திருந்தால் “ஏ” சர்டிபிகேட் தான் கிடைத்திருக்கும். ஆனால் சென்சார் போர்ட் அந்த நான்கு நிமிட காட்சியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாம் பார்க்கும் இந்த திரைப்படத்தில் இருப்பதை விரும்பவில்லை. அதனால் அந்த நான்கு நிமிட காட்சியை நீக்கி எங்களுக்கு யு ஏ சர்டிபிகேட்டை கொடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஒரு இயக்குனராக அந்த நான்கு நிமிட காட்சியை நீக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது.ஆனால் சென்சார் போர்ட் இப்படி இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.

மேலும் இந்த நான்கு நிமிட காட்சியை நீக்கியதால் திரைப்படத்தில் எந்த கருத்தும், கருவூலமும் பாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அது ஒரு சின்ன சண்டை  காட்சிதான் என்றும் கூறியிருந்தார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

அதேபோல் இந்தத் திரைப்படத்தில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 3 எமோஷனல் சீன்களை கையாண்டு இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதில் நடிகர் தனுஷ் அசுரன் மற்றும் மயக்கம் என்ன போன்ற திரைப்படங்களின் நடித்தது போன்று நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் இந்த நிலையில் இந்த தகவல் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெருமளவில் ஆதரவளித்தார்கள்.

இந்தத் திரைப்படத்தில் இவருடைய யதார்த்தமான நடிப்பிற்கு பல அவார்டுகளும் குவிந்தது .அதேபோல் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கும் நடிகர் தனுஷிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உறுதியாக இருக்கிறது.

Most Popular