Friday, May 17, 2024
- Advertisement -
Homeசினிமாகேப்டன் மில்லர் திரைப்படத்தின் டிரைலர் எப்போது?

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டிரைலர் எப்போது?

சாணிக் காகிதம், ராக்கி போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தை நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் எடுக்கப் போவதான தகவல் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தினுடைய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் சிறப்பாக இசையமைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து இத்திரை திரைப்படம் எடுப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்படும் வீடியோக்கள் எல்லாம் படக்குழுவினர்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தினார்கள்.

- Advertisement -

அதுவும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த சாணிக் காகிதம் மற்றும் ராக்கி என்ற இரண்டு திரைப்படங்களுமே குருதி தெறிக்க எடுக்கப்பட்ட ஆக்சன் திரில்லர் திரைப்படங்கள் ஆகும். அவருடைய இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாலேயே திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆரம்பத்தில் அடுக்கடுக்கான தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்த திரைப்படம் பிறகு எந்த தகவலையும் வெளியிடாமல் அமைதியாக இருக்கிறது. தற்பொழுது திரைப்படத்தைப் பற்றி ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது.

வருகின்ற ஜூலை 28ஆம் தேதி முடிக்க தனுஷின் பிறந்த நாளை ஒட்டி கேப்டன் மில்லர் திரைப்படத்தைப் அப்டேட்ஸ் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது . அது ஒரு வேலை திரைப்படத்தின் உடைய ட்ரெய்லராக கூட இருக்கலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தையும் விரைவில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.இதற்கு முன்பு ராஜ்கிரனை வைத்து நடிகர் தனுஷ் பவர் பாண்டி என்று திரைப்படத்தை இயக்கி நடித்தார்.

அந்த திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த திரைப்படத்தையும் சிறப்பாக இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த திரைப்படத்தின் நடிகர் தனுஷிற்கு கதாநாயகியாக சூரரைப் போற்று திரைப்படத்தின் நடித்த அபர்ணா பால முரளி நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் நடித்த படிக்காதவன், உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்பொழுது தனுஷ் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய ஐம்பதாவது படத்தையும் தனுஷ் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Most Popular