Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாபடம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே வசூல் சாதனை..! வேட்டையன் போஸ்டரை வெளியிட்டு கொண்டாடிய சந்திரமுகி 2

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே வசூல் சாதனை..! வேட்டையன் போஸ்டரை வெளியிட்டு கொண்டாடிய சந்திரமுகி 2

சந்திரமுகி 2 திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படக்குழுவுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய வகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது.

- Advertisement -

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

சந்திரமுகி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தற்போது அந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸும் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் வேட்டையன் ராஜாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

இந்தப் படத்தின் பட்ஜெட் 30 முதல் 50 கோடி வரை இருக்கும் என தெரிகிறது. ஆனால் netflix நிறுவனம் இந்த படத்தை சுமார் 40 முதல் 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதேபோன்று சன் டிவி நிறுவனம் இதன் ஒளிபரப்பு உரிமையை 20 முதல் 40 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்கப்பட்டால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 100 கோடி வருமானத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ராகவா லாரன்ஸ், பி வாசு உள்ளிட்ட படகு குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.ஏற்கனவே படம் மிரட்டலாக இருப்பதாக இசையமைப்பாளர் கீதாவாணி வெளியிட்டுள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Most Popular