Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாராயன் திரைப்படம் எஸ் ஜே சூர்யாவால் வெல்லுமா..? ரசிகர்களின் கருத்து..!

ராயன் திரைப்படம் எஸ் ஜே சூர்யாவால் வெல்லுமா..? ரசிகர்களின் கருத்து..!

ரசிகர்களால் நடிப்பு அரகன் என்று போற்றப்படுபவர்  எஸ் ஜே சூர்யா. இவர் தன்னுடைய அசாதாரமான நடிப்பால் எளிதில் ரசிகர்களை தன்வசப்படுத்தும் ஆற்றல் உடையவர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த வாலி, குஷி போன்ற திரைப்படங்களும் ரசிகர்கள் மனதில் இன்றும் நிற்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

தனக்கென்று தனித்துவமான நடிப்பை கொண்ட எஸ் ஜே சூர்யா இறைவி திரைப்படத்திற்கு பிறகு சிறந்த கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார் அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே உச்சகட்ட வெற்றி அடைகிறது. தளபதி விஜய் உடன் நடித்த மெர்சல் ,நடிகர் சிம்புவுடன் மாநாடு , சிவகார்த்திகேயன் நடித்த டான் , நடிகர் விஷால் நடித்த மார்க்  ஆண்டனி ,நடிகர் லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா இது எல்லாவற்றிலும் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்து ஹீரோக்களை விட அதிக ஸ்கோர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் நிறைய ரசிகர்கள் இவர் நடித்தால் இவருக்காகவே அந்த திரைப்படத்தை பார்க்க திரையரங்குக்கு வரும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் .அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் தற்பொழுது நடிகர் தனுஷ் உடன் ராயன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்

- Advertisement -

இந்த நிலையில் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் நடிகர் தனுஷிற்கு எதிர்பார்த்த வெற்றியை  தரவில்லை  கேப்டன் மில்லர் திரைப்படமும் ஓரளவு கலமையான விமர்சனங்களை தான் பெற்றது .ஆனால் தற்பொழுது எஸ்.ஜே சூர்யாவிடம் நடிக்கும் ராயன்  திரைப்படம் நல்ல வெற்றி தரும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள் .

- Advertisement -

நடிகர் தனுஷின் எஸ் ஜே சூர்யா வின் இதுவரை கிளைகள் பார்க்காத காம்போ. ஆனால் இவர்கள் இருவருக்குமே தனித்துவமான நடிப்பு உள்ளது. ரசிகர்களை அவர்கள் பக்கம் எளிதில் ஈர்க்கும்  தன்மை உள்ளதால் நிச்சயம் ராயன் திரைப்படம் வெற்றி அடையும் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.

எஸ் ஜே சூர்யா வின் நடிப்பு இந்த தனுஷ் நடிக்கும் ராயன் திரைப்படத்திற்கு கைக்குடுக்குமா என்றும் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள். இது எல்லா கேள்விகளுக்கும் திரைப்படம் வெளிவந்தால் மட்டுமே பதில் கிடைக்கும்.

Most Popular