Thursday, April 25, 2024
- Advertisement -
HomeUncategorized"பிப்ரவரி'17 இல் திரைக்கு வர இருக்கும் வாத்தி படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் அப்டேட்" !

“பிப்ரவரி’17 இல் திரைக்கு வர இருக்கும் வாத்தி படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் அப்டேட்” !

நானே வருவேன் படத்தின் தோல்வியை தொடர்ந்து  அடுத்து ஒரு வெற்றியை நோக்கி  தனுஷ் முலமாக நடித்துக் கொண்டிருக்கும் படம்  வாத்தி.. இத்திரைப்படத்தை  நாகவம்சி மற்றும்  சாய் சௌஜன்ய ஆகியோரின் தயாரிப்பில்  இப்படமானது உருவாகியது . இத்திரைப்படத்தை  வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழா  கடந்த சனிக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது .

- Advertisement -

இந்தத் திரைப்படத்தினை  செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும்  தென்னிந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள்  விநியோகிக்க இருக்கின்றன . இந்தத் திரைப்படத்தில் தனுசுடன்,சம்யுக்தாமேனன்,தனிக்கெல்லா பரணி,சமுத்திரக்கனி,ஆடுகளம் நரேன்  இளவரசு,சா.ரா, தொடப்பள்ளி மது உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்திருக்கின்றனர்.

கடந்த வருடம் வெளியான திரைப்படங்களில் திருச்சிற்றம்பலம் படம் மட்டுமே  தனுசுக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது . மிகப்பெரிய எதிர்பார்ப்பில்  அவரது அண்ணன்  செல்வராகவன் இயக்கத்தில் வெளியான  நானே வருவேன் திரைப்படம்  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம் . இதனால் மீண்டும் வெற்றியை கொடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில்  நடித்திருக்கும் படம் வாத்தி. இந்தத் திரைப்படத்தின் பாடல்கள்  யூடியூபில் வெளியாகி  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன்  வருகின்ற பிப்ரவரி 17 ஆம் தேதி  இந்தத் திரைப்படம் ஆனது வெளியாக இருக்கிறது . இதனை முன்னிட்டு  இப்படத்திற்கான  ட்ரைலர்  வருகின்ற புதன்கிழமை பிப்ரவரி 8ஆம் தேதி  வெளியிடப்பட இருக்கிறது . இதனை பட குழுவினரே  தங்களின் ட்விட்டர் பக்கத்தில்  அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர் . சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட ஆடியோ வெளியிட்டைத் தொடர்ந்து  அடுத்த மூன்று நாட்களில் ட்ரெய்லர் வருவது  படத்திற்கான எதிர்பார்ப்பை  ரசிகர்களிடம் எகிற செய்திருக்கிறது .

- Advertisement -

இந்தத் திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில்  ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது . தனுஷ் நடித்த திரைப்படங்களிலேயே  ஒரே நேரத்தில்  இரண்டு மொழிகளில் வெளியாக போகும் திரைப்படம் இதுதான் . இது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது . தனுஷிற்கான எதிர்பார்ப்பு  தெலுங்கு சினிமாவில்  எப்படி இருக்கும் என்பதை  வாத்தி படம் முடிவு செய்யும் என்றே கூறலாம் . இத்திரைப்படத்தில் தனுஷ்  கல்லூரி உதவி பேராசிரியர்  வேடமேற்று நடித்திருப்பதாக  சினிமா  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இத்திரைப்படத்தினை தொடர்ந்து  கேப்டன் மில்லர் திரைப்படத்தில்  வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.  அதன் பிறகு அவரது ஐம்பதாவது படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக  அவரே நடிக்கும் இயக்க இருப்பதாக  தகவல்கள் வருகின்றன .

Most Popular