சினிமா

கௌதம் வாசுதேவ் மேனனை கண்டும் காணாமல் சென்ற தனுஷ்! எதற்கு இந்த ஈகோ – கௌதம் மேனன் சாடல்!

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தால் என்மீது மனகசப்பில் இருக்கிறார் தனுஷ். சமீபத்திய பேட்டியில் கௌதம் வாசுதேவ் மேனன் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் காதல் கதைக்களத்தை மையமாக வைத்து திரைப்படமெடுத்து வெற்றிகரமான இயக்குனராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்னர் சில விளம்பர படங்களையும் அவர் எடுத்து வந்திருக்கிறார். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனக்கென தனி ஒரு பாதையை தமிழ் திரையுலகில் உருவாக்கிக் கொண்டார் கௌதம். இவர் எடுத்துள்ள வெற்றி படங்களில் காக்க காக்க, மின்னலே, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் ஆகிய படங்களும் அடங்கும்.

சமீபத்தில் சிம்புவை ஹீரோவாக வைத்து இவர் இரண்டாவது முறையாக இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அதற்கு மிகச்சிறப்பான வரவேற்பும் கிடைத்தது. வழக்கமாக காதல் கதைகளை படமாக்கி அதை ரசிகர்களுக்கு கொடுக்கும் இவர், இம்முறை கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக வைத்து இயக்கியிருப்பது புதிய அனுபவத்தை தந்திருக்கிறது. இதற்கு முன்னர் தனுஷ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் இணைந்து பணியாற்றிய ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பல போராட்டத்திற்கு பிறகு திரையரங்கிற்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் மற்றும் தனுஷ் இருவருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு நிலவியதாகவும் அதனால் தனுஷ் இப்படத்தில் நடிப்பதற்கு விரும்பவில்லை பாதியிலேயே விலகிக் கொள்கிறேன் என்று பகிரங்கமாக தெரிவித்ததாகவும் தனது சமீபத்திய பேட்டியில் கௌதம் வாசுதேவ் மேனன் மனம் திறந்து பேசியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் தனது பேட்டியில், “என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை என்னால் முழுமையாக முடிப்பதற்கு பல சிக்கல்கள் நிலவியது. ஏனெனில் படப்பிடிப்பின் நடுவே தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அவர் பாதியிலேயே விலக்குகிறேன் என கூறிவிட்டார். அதன்பிறகு நடைபெற்ற சில பேச்சுவார்த்தைகளால் படம் மீண்டும் துவங்கப்பட்டது. பல போராட்டங்கள் மற்றும் விவாதங்களுக்கு பிறகு இத்திரைப்படத்தை நாங்கள் திரையிட்டோம். இப்படத்தின் நடுவே ஏற்பட்ட சஞ்சலத்தினால் தனுஷ் என் மீது மனக்கசப்பில் இருக்கிறார் என்பதை சமீபத்தில் அவரை நேரில் சந்தித்தபோது உணர்ந்தேன். அண்மையில் விழா ஒன்றில் நான் தனுசை சந்தித்தேன். அவரிடம் சென்று நான் பேச முற்பட்டபோது தனுஷ் என்னை கண்டும் காணாமல் நகர்ந்து சென்றார். இன்னும் அவருக்கு என்மீது கோபம் இருப்பதாக அப்போது உணர்ந்தேன்.” என்று பேசினார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top