Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமா3வது படத்தை இயக்கும் தனுஷ்.. சொந்த தங்கை மகனை ஹீரோ ஆக்குகிறார்

3வது படத்தை இயக்கும் தனுஷ்.. சொந்த தங்கை மகனை ஹீரோ ஆக்குகிறார்

தமிழ் சினிமாவில் நடிகர் பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என்று எல்லாவற்றிலும் கலக்கி வருகிறார் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அது தனுஷ் முதலிடம் பெறுவார். அந்த அளவிற்கு எல்லா திறமையும் சினிமாவில் நடிகர் தனுஷிற்கு இருக்கிறது.

- Advertisement -

நடிகராக தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு முதன்மையான நிலையில் இருந்து வருகிறார். தற்பொழுது இயக்குனராக தன் திறமையை காட்டு முழுமூச்சாக இறங்கி இருக்கிறார். நடிகர் தனுஷ் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி என்ற திரைப்படத்தை நடிகர் தனுஷ் முதன் முதலில் இயக்கியுள்ளார்.

அவரை நடித்தும் இருந்தால் வித்தியாசமான கதைகளத்தில் அமைந்திருந்தது. திரைப்படத்திற்கு விமர்சனம் ரீதியாக நல்ல பெயர் கிடைத்தது. இதை தொடர்ந்து இவர் தற்பொழுது தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தில் இயக்கி வருகிறார்.திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

- Advertisement -

மேலும் இத்திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சந்திக் கிஷன், நித்யா மேனன், காளிதாஸ், ஜெயராம் போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் திரைப்படம் வருகின்ற ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் இயக்கம் அடுத்த திரைப்படத்தைப் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது .இது இவர் இயக்கம் மூன்றாவது திரைப்படம் ஆகும்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தில் தன்னுடைய சகோதரி மகனை கதாநாயகனாக வைத்து நடிகர் தனுஷ் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. மேலும் திரைப்படத்தின் கதாநாயகியாக அஜித் திரைப்படத்தில் மகளாக அறிமுகமான அனிகா சுரைந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

மேலும் திரைப்படத்தின் சுவாரசியமாக ஒரு சர்ப்ரைஸ் செய்யும் வைத்திருக்கிறார்கள். லியோ திரைப்படத்தின் நடித்த மாத்தி தாமஸும் 2019 ஆம் ஆண்டு இணையத்தை கலக்கிய ஒரு ஆர்டர் லவ் என்ற திரைப்படத்தில் நடித்த பிரியா வாரியரும் இத்திரைப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது திரைப்படத்தின் மீது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது .

இந்தத் திரைப்படம் முற்றிலும் உணர்ச்சி பூர்வமான ஒரு காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. மேலும் இது பற்றிய கூடுதல் தகவல்கள் நாளை அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் திரைப்படத்தின் உடைய தகவலுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Most Popular