Friday, March 29, 2024
- Advertisement -
HomeUncategorized"ஐந்து மொழியில் தசரா டீஸர்"! தமிழில் வெளியிடும் தனுஷ்!

“ஐந்து மொழியில் தசரா டீஸர்”! தமிழில் வெளியிடும் தனுஷ்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நானி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தசரா . இந்தத் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெற்றி நடை போட்டு வரும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர சமுத்திரக்கனி,ஜரினா வஹாப்,சாய் குமார், டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

இத்திரைப்படமானது அறிமுக இயக்குனரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் இதுவரை நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஏற்று நடிச்சிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் உருவாகி இருக்கிறது .சுதாகர் செருகுரி இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா ப்ரொடக்ஷன் சார்பாக தயாரித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் கதையானது கோதாவரிகானி அருகே உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேஜிஎஃ’ ஐ போன்றே ஒரு வித்தியாசமான பின்னணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது .

- Advertisement -

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது .

- Advertisement -

இந்தத் திரைப்படம் தெலுங்கு,தமிழ், ஹிந்தி கன்னடம்,மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது . இப்படத்தின் தமிழ் டீசரினை தனுஷ் வெளியீட இருக்கிறார் . மேலும் கன்னட படத்தின் டீசர் கந்தாரா படத்தை இயக்கி நடித்த ரக்ஷித் செட்டி வெளியிடுகிறார். இப்படத்தில் மலையாள டீசரை துல்கர் சல்மானும் ஹிந்தி டீசரை ஷாஹித் கபூர் வெளியிடுகிறார்கள்.

இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விளம்பரமே பிரம்மாண்டமான பின்னணி இசையுடன் மிரட்டும் தேனியில் இருக்கிறது. மேலும் படத்தில் இடம்பெற்று இருக்கின்ற நடிகர்களின் தோற்றங்களை வைத்து பார்க்கும் போது இது நிச்சயமாக ஒரு ஆக்சன் தொடர்ந்து அதிரடி திரைப்படம் ஆக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .

Most Popular