Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainment2024-ஐ தனுஷ் பெயரில் எழுதுங்கோ..  வரிசைக் கட்டி நிற்கும் ரிலீஸ்.. 3 மாதங்களுக்கு ஒரு படத்தை...

2024-ஐ தனுஷ் பெயரில் எழுதுங்கோ..  வரிசைக் கட்டி நிற்கும் ரிலீஸ்.. 3 மாதங்களுக்கு ஒரு படத்தை வெளியிட திட்டம்

துள்ளவதோ இளமை, காதல் கொண்டேன் படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த தனுஷ், பொல்லாதவன், ஆடுகளம் படங்கள் மூலமாக கமர்ஷியல் ஹீரோவாக மாறினார். அதன்பின் விஐபி 2, ரான்சனா, ஷமிதாப் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து பாலிவுட்டிலும் பிரபல ஹீரோவாக மாறினார். அதேபோல் வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

- Advertisement -

இதனால் தனுஷ் படங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல மவுசு கூடியுள்ளது. இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். 3 மாநிலங்களை சேர்ந்த ஸ்டார் நடிகர்கள் நடித்திருப்பதால், கேப்டன் மில்லர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் தனுஷின் சினிமா வாழ்க்கையில் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளை நேரு ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

- Advertisement -

அதேபோல் தனுஷின் 50வது திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

- Advertisement -

அதேபோல் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு கேப்டன் மில்லர் படம் ரிலீஸாக உள்ள நிலையில், தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி தனுஷின் 50வது படம் ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஜூலையில் தனுஷ் இயக்கும் 3வது படத்தை திரைக்கு கொண்டு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Most Popular