Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாகெளதம் மேனன் மீது கோபத்தில் இருக்கும் விக்ரம்.. ஒரு விசயத்தை செய்யாமல் இப்படி விட்டாரே?

கெளதம் மேனன் மீது கோபத்தில் இருக்கும் விக்ரம்.. ஒரு விசயத்தை செய்யாமல் இப்படி விட்டாரே?

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது என்ற இந்த தகவல் பல நாட்களாக ஏன் பல வருடங்களாகவே சொல்லப்பட்டு வருகிறது.

- Advertisement -

2013ஆம் ஆண்டு நடிகர் சூர்யா துருவ நட்சத்திரம் என்ற ஒரு திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கப் போகிறார் என்று முதன் முதலில் அறிவித்தார்.அதற்குப் பிறகு நடிகர் விக்ரமை வைத்து 2017 ஆம் ஆண்டு இத் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பும் தொடங்கியது.

அதேபோல் இத்திரைப்படத்தினுடைய முதல் ட்ரைலரும் வெளியிடப்பட்டது இப்படி விறுவிறுப்பாக ஆரம்பித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா போன்ற காரணங்களினால் தடைப்பட்டது.மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சில பைனான்ஸ் ப்ராப்ளம் இருந்ததாலும் திரைப்படம் இயக்குவது தாமதமானது.

- Advertisement -

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை நடிகர் சிம்புவை வைத்து இயக்கி வெளியிட்டார்.

- Advertisement -

அதேபோல் சியான் விக்ரமும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் உடைய இரண்டு பாகங்களிலுமே நடித்து அத்திரைப்படங்களும் வெளியிடப்பட்டு வெற்றி அடைந்தது. இருந்தபோதிலும் பாதியில் நிறுத்தப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படத்தைப் பற்றி தகவல் எதுவும் வெளிவராமல் இருந்தது.

தற்பொழுது இத்திரைப்படம் மீண்டும் படப்பிடிப்பு முடிந்து விட்டது.இந்தத் திரைப்படத்திற்கு துருவ நட்சத்திரம் சப்டர் ஒன் யுத்த காண்டம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.இதன் அடிப்படையில் இந்த திரைப்படம் கேஜிஎப் போல இரண்டு மூன்று சாப்டர்களை கொண்டிருக்கும் என்று தெரிய வருகிறது.

இந்தத் திரைப்படம் ஒரு ஸ்பை த்ரில்லர் திரைப்படமாகும். இதில் சியான் விக்ரமுடன் இணைந்து சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, டிடி ,அர்ஜுன் தாஸ், பார்த்திபன் சரத்குமார் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் உடைய முதல் பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. நீண்ட நாட்கள் ஆக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்தின் உடைய பாடல் வெளியிடப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எப்பொழுது திரைப்படம் வெளியிடப் போகிறார்கள் என்று கேள்வி அடுத்தது எழுந்திருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க இந்த திரைப்படத்தின் இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இத்திரைப்படத்தினுடைய கதாநாயகனான சியான் விக்ரமின் மீது கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டால் அதில் நடித்திருக்கும் முக்கிய நட்சத்திரங்கள் தான் பிரமோஷன் செய்வார்கள். ஆனால் நடிகர் விக்ரம் தற்பொழுது துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் உடைய முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நிலையில் அதைப்பற்றி எந்தத் டிவிட்டும் அவர் செய்யவில்லை என்று ஆத்திரமடைந்திருக்கிறாராம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

விக்ரமின் இந்த நடவடிக்கைக்கு காரணம் துருவ நட்சத்திர படத்தை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீஸ் செய்யப் போகிறோம். நீங்கள் தேடி கொடுங்கள் என கௌதம் கேட்டாராம்.ஆனால் சொன்னது போல் படத்தை ரிலீஸ் செய்யாததால் கடுப்பான விக்ரம், இனி இந்த படம் தொடர்பாக இந்த விஷயத்திலும் ஈடுபட மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கிறார்.

Most Popular