Wednesday, May 8, 2024
- Advertisement -
HomeUncategorizedஅஜித்தின் முதுகில் குத்திய இயக்குனர் வினோத்? ஒரே பேட்டியில் கிண்டல் செய்யப்படும் துணிவு

அஜித்தின் முதுகில் குத்திய இயக்குனர் வினோத்? ஒரே பேட்டியில் கிண்டல் செய்யப்படும் துணிவு

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவரானவர் நடிகர் அஜித்.  அவருடைய ரசிகர்கள் இவரை தல அஜித் என்று சொல்வது மட்டுமல்லாமல்,  நாங்கள் எல்லாம் ஒரு நல்ல மனிதருடைய ரசிகர்கள் என்றும் பெருமையுடன் கூறுவார்கள். உண்மையாகவே நடிகர் அஜித் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல ஒரு நல்ல  மனிதரும்  கூட தான்.

பொதுவாகவே இந்த உலகத்தில் நல்ல மனிதர்களை மோசம் செய்து பார்ப்பதே இந்த உலகம் மக்களின் வேலையாகும். இதில் நடிகர் அஜித்தும் விதிவிலக்கு இல்லை. இப்படியான விஷயத்தைப் பற்றி பலமுறை நடிகர் அஜித்தை நேரடியாக கூறியிருக்கிறார். என்னை முதுகில் குத்துவோர் இந்த உலகில் மிக அதிகம் என்று தான் கடந்து வந்தவர்கள பற்றி கூறியிருக்கிறார் .

- Advertisement -

அதேபோல் நடிகர் அஜித்திற்கு பொதுவாகவே ஒரு பழக்கம் உள்ளது
தன்னிடம் யாராவது ஒரு கதையை கூற வந்தால் அந்த கதையை முழுமையாக கேட்காமலேயே அந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமிட்டு விடுவார். அதனால் அந்த திரைப்படம் பல நேரங்களில் அவருக்கு தோல்வியை தந்திருக்கிறது. சில நேரங்களில் எதிர்பாராத அளவிற்கு வெற்றியும் அடைந்திருக்கிறது. இதற்கு முன்பு திரையரங்கில் வெளியான வலிமை திரைப்படமும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

- Advertisement -

தற்பொழுது நடிகர் அஜித் நடித்து வரும் துணிவு  திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. வலிமை திரைப்படம் ஒரு வெற்றியை தராவிட்டாலும் அந்த இயக்குனர் மீது உள்ள நம்பிக்கையால் மீண்டும் அதே இயக்குனர் வினோத்தோடு இந்த துணிவு திரைப்படத்தை நடித்து வருகிறார் நடிகர் அஜித்.ஆனால் இதற்கு முன்பு இவர்கள் இருவரின் இணைப்பில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

துணிவு திரைப்படத்திற்கும் இயக்குனர் வினோத் ஒரே ஒரு காட்சியை பற்றி விளக்கிய போதே நடிகர் அஜித்திற்கு இந்த காட்சி மிகவும் பிடித்துவிட்டது. இதனால் கதையை கேட்காமல் நான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன் என்று ஒரே ஒரு காட்சிக்காகவே துணிவு திரைப்படத்தின் ஒப்பந்தமிட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த முறையும் நடிகர் அஜித் கூறியது போலவே அவர் எந்த ஒரு காட்சியை விரும்பினாரோ எதிர்பாராத விதமாக அந்த காட்சி இந்த படத்தில் இடம்பெறவில்லை என்று இயக்குனர் வினோத் கூறி இருக்கிறார். இது இயற்கையாகவே நடந்தாலும் இது நடிகர் அஜித்தை முதுகில் குத்தியது போல் தான் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.அவர் விரும்பிய காட்சி இடம் பெறாவிட்டாலும் அவர் நடிக்கும் இந்த துணிவு திரைப்படம் நிச்சயமாக ஒரு நல்ல வெற்றி அடையும் என்று தல ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Most Popular