Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாவாரிசு கொடுத்த தைரியம்.. மொக்கை வாங்கிய தில் ராஜூ.. சமந்தாவுக்கு சிக்கல்

வாரிசு கொடுத்த தைரியம்.. மொக்கை வாங்கிய தில் ராஜூ.. சமந்தாவுக்கு சிக்கல்

- Advertisement -

தமிழ் சினிமாவில் வாரிசு திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் தில் ராஜு. வாரிசு திரைப்படத்திற்கு போதிய திரையரங்குகளை ரெட் ஜெய்ண்ஸ் நிறுவனம் கொடுக்கவில்லை என வெளிப்படையாக குற்றச்சாட்டை வைத்த தில் ராஜு, விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் என கூறினார்.

இது அஜித் ரசிகர்களை விரக்தி அடையச் செய்தது. மேலும் மேடையில் பேசும்போது கூட மற்ற நடிகர் ரசிகர்களை கிண்டல் செய்யும் விதமாக பேசினார். மேலும் டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா பைட் இருக்கு, சென்டிமென்ட் வேணுமா அதுவும் இருக்கு என்று பேசி ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தை திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாளில் சிறப்பு காட்சியை சத்தியம் திரையரங்கில் வெளியிட்டார் .

- Advertisement -

இதன் மூலம் படம் சிறப்பாக வந்திருப்பதாக பலரும் பாராட்டிய நிலையில், அது வாரிசுக்கு போனஸ் ஆக அமைந்தது. இதனால் வாரிசு கொடுத்த நம்பிக்கையை நம்பி தற்போது தில் ராஜு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சகுந்தலம் என சமந்தாவை வைத்து ஒரு படத்தை தயாரித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் வாரிசு படத்தை போல் நான்கு நாட்களுக்கு முன்பு சிறப்பு காட்சியை திரையிட்டு இருக்கிறார். ஆனால் அவருடைய எதிர்பார்ப்புக்கு மாறாக ரசிகர்கள் படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என கூறிவிட்டார்கள். அதனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சகுந்தலம் நெகட்டிவ் விமர்சனம் பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக சரிந்துள்ளது.

மேலும் படத்தின் டிக்கெட் விற்பனையும் அடி வாங்கி இருக்கிறது.  நடிகை சமந்தா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் சகுந்தலம் படத்தை தான் வெகுவாக நம்பி இருந்தார். தற்போது தில் ராஜுவின் ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆல் தற்போது சமந்தாவுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தவறு செய்து விட்டோமோ என்று விரக்தியில் தில் ராஜு இருக்கிறார்.

Most Popular