Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஇயக்குனராக அவதாரம் எடுக்கும் கேப்டன் மில்லர் டைரக்டரின் மனைவி… கணவரைப் போலவே முழுக்க முழுக்க ஆக்சன்...

இயக்குனராக அவதாரம் எடுக்கும் கேப்டன் மில்லர் டைரக்டரின் மனைவி… கணவரைப் போலவே முழுக்க முழுக்க ஆக்சன் படத்தை இயக்க இருப்பதாக தகவல்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் மனைவி புதிய திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஆக்சன் கிங் அருண் மாதேஸ்வரன்

ராக்கி எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில்,தரமணி வசந்த், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளுடன் ரத்தமும் சதையுமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும், வசூலை அள்ளுவதில் கோட்டை விட்டது. ஆக்ரோஷமான காட்சிகள் அதிகப்படியாக இருந்தாலும், வன்முறைக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்ததாலும் இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

தனுஷுடன் இணைந்த இயக்குனர்

இதையடுத்து, கீர்த்தி சுரேஷ் இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சாணிக்காயிதம் எனும் திரைப்படத்தை எடுத்தார் அருண் மாதேஸ்வரன். பழிக்கு பழி கதையாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திலும் வன்முறை காட்சிகள் நிரம்பி வழிந்தன. கீர்த்தி சுரேஷின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், கொலைவெறி காட்சிகளுக்கு இயக்குனர் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்ததால் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. ஓடிடி-இல் படம் நேரடியாக வெளியானதாலும் பெரிதாக பேசப்படாமல் போனது.

- Advertisement -
Dhanush Captain Miller

இந்த சூழலில், நடிகர் தனுசுடன் இணைந்த அருண் மாதேஸ்வரன், கேப்டன் மில்லர் என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

- Advertisement -

சுதந்திரத்திற்கு முன்பு நடந்த காலகட்டத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருப்பதாகவும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களை கேப்டன் மில்லர் துவம்சம் செய்வது போன்று கதை எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் முதல் தோற்றத்தில் கையில் பெரிய ஆயுதத்துடன் போர்க்களத்தில் தனுஷ் நிற்பது போன்ற புகைப்படம் வெளியானது. வரும் 28ஆம் தேதி தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு கேப்டன் மில்லரின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகுக்கு அறிமுகமாகும் இயக்குனரின் மனைவி

இந்த நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் மனைவி ரஞ்சனி, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கன்னட தயாரிப்பு நிறுவனமான கே ஆர் ஜி ஃபிலிம்ஸ், முதன் முதலில் தமிழில் தயாரிக்கிறது. கணவரைப் போலவே முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இதனை ரஞ்சனி உருவாக்குகிறார். திருநெல்வேலியை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்படும் இந்த திரைப்படத்தின் முழு விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular