Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாஏ .ஆர் ரகுமானுக்காக கடன் வாங்கிய இயக்குனர் கதிர்.. எதற்காக தெரியுமா..?

ஏ .ஆர் ரகுமானுக்காக கடன் வாங்கிய இயக்குனர் கதிர்.. எதற்காக தெரியுமா..?

1991 வெளிவந்த இதயம் திரைப்படம் இன்று வரை யார் மனதிலும் மாறாத ஒரு காதல் காவியமாக இருக்கிறது. முரளி மற்றும் ஹீராவின் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் கதிர். இவருக்கு இது முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் இவர் காட்டிய காதல் காட்சிகளும் அந்த தவிப்பும் ஏக்கமும் பார்ப்பவர்களையும் உணரச் செய்தது.

- Advertisement -

இவர் இதயம் திரைப்படத்தை தொடர்ந்து உழவன் ,காதல் தேசம் ,காதல் வைரஸ் போன்ற திரைப்படங்களை இயக்கினார் இவர் சமீபத்தில் ஜீ தமிழ் ஒளிபரப்பப்பட்ட சரிகமப என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .

அப்பொழுது சரிகமம நிகழ்ச்சியின் நடுவரான பாடகர் ஸ்ரீனிவாஸ் இயக்குனர் கதிரிடம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு  முதலில் அட்வான்ஸ் கொடுத்து தமிழ் சினிமாவிற்கு அழைத்தவர் நீங்கள் தான் என்று கூறுவார்கள் என்றார் .அதற்கு இயக்குநர் கதிர் அது உண்மை இல்லை. எனக்கு ஜெயேந்திரன் மூலமாகத்தான் ஏ .ஆர் ரஹ்மான் எனக்கு அறிமுகமானார்.

- Advertisement -

ஆனால் அப்பொழுது அவர் திலிப்பாக இருந்தார். எனக்கு இதயம் திரைப்படத்திற்குப் பிறகு ஒரு மாடலான லவ் ஸ்டோரி இயக்க வேண்டும் என்று விரும்பினேன் .ஆனால் அதற்கு யாரும் ப்ரொடியூஸ் செய்ய மாட்டார்கள். அதனால் நாமே ப்ரொடியூசர் ஆகி விடுவோம் என்று கடன் எல்லாம் வாங்கி லவ் ஃபிலிம் இண்டஸ்ட்ரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்தேன்.

- Advertisement -

அந்த மாடலான லவ் ஸ்டோரி தான் காதல் தேசம் .இந்த திரைப்படத்தில் மாடனான வித்தியாசமான பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக ஒரு நல்ல இசையமைப்பாளரை எனக்கு அறிமுகம் செய்யுமாறு ஜெயேந்திரனிடம் கேட்டேன் அவர் தான் எனக்கு ஏ ஆர் ரஹ்மானை  அறிமுகப்படுத்தினார்.

நான் ஏ ஆர் ரகுமானிடம் பேசும் பொழுது அவர் என்னை அவருடைய ஸ்டூடியோ விற்கு அழைத்தார். நானும் அங்கு சென்றேன் அப்பொழுது ஏ ஆர் ரகுமான் கையில் கிட்டாரை வைத்துக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்திருந்தார். நான் அப்பொழுது அவரிடம் கேட்டேன் இதற்கு முன்பு நீங்கள் தமிழில் ஏதாவது பாடலை இயக்கி இருக்கிறீர்களா என்று கேட்டேன்.

அதற்கு எதுவும் கூறாமல் ரேடியோவில் ரோஜா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள :சின்ன சின்ன ஆசை” ,” புது வெள்ளை மழை” ஆகிய பாடல்களை போட்டுக் காட்டினார் நான் அப்படியே அதிர்ந்து போய் விட்டேன். நான்தான் இவரை முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் எனக்கும் முன்பு இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் அட்வான்ஸ் கொடுத்து அதற்காக ஏ ஆர் ரகுமான் பாடல்களையும் இயக்கிவிட்டார் அதனால் அதுதான் அவருக்கு முதல் தமிழ் திரைப்படம் ஆகும்.

இந்த பாடல்களைக் கேட்ட உடன் எனக்கு ரஹ்மானை எப்படியாவது தன்னுடைய திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஆக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் .உடனே என்னுடைய நண்பர் வேலாயுதம் என்று ஒருவர் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். அவரிடம் சென்று பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி சில பழங்களையும் வாங்கிக் கொண்டு என் நண்பரையும் கூட்டிக்கொண்டு ஏ ஆர் ரகுமானிடம் சென்று அட்வான்ஸ் கொடுத்து விட்டேன்.

அன்று துவங்கியதுதான் எங்களின் இந்த பயணம். இதைத்தொடர்ந்து அவர் உழவன் ,காதல் வைரஸ் என்று அவர் இயக்கிய திரைப்படங்களில் பல திரைப்படங்களுக்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டார் இயக்குனர் கதிர்.

Most Popular