Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாவேட்டைமன்னன் படத்தை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ள நெல்சன்.. ! ஆனால் அதற்கு முட்டுக்கட்டாக நிற்கும் ரஜினி.....

வேட்டைமன்னன் படத்தை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ள நெல்சன்.. ! ஆனால் அதற்கு முட்டுக்கட்டாக நிற்கும் ரஜினி.. !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்காக இயக்குனர் நெல்சன் வழக்கமாக செய்வதை விட கூடுதல் உழைப்பை போட்டுள்ளார். இந்த படத்தை வைத்து தான் அவரது அடுத்தக் கட்ட சினிமா கேரியரே இருக்கிறது.

- Advertisement -

நயன்தாரா, யோகி பாபு கூட்டணியில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார் இயக்குனர் நெல்சன். பின்னர் டாக்டர், பீஸ்ட் என அடுத்தடுத்து 2 பெரிய படங்களைச் செய்த பிறகு தற்போது ஜெயிலரை முடித்துள்ளார். ஆனால் இந்த படங்கள் அனைத்திற்கும் முன்பே 2013ஆம் ஆண்டே அவர் தன் முதல் படத்தை துவங்கினார்.

சிலம்பரசன் ஹீரோவாக நடித்த வேட்டைமன்னன் படமே அது. இந்தப் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. சிம்பு, ஹன்சிகா, ஜெய், சந்தானம், ரெடிங் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் கைவிடபட்டதால் அவர் சினிமாவுக்குள் வர இன்னும் 5 ஆண்டுகள் தேவைப்பட்டது.

- Advertisement -

தற்போது கிடைத்துள்ள சூடான செய்தி என்னவென்றால் இயக்குனர் நெல்சன் வேட்டைமன்னன் படத்தை மீண்டும் துவங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்து நிகழ ஓர் வேலி தடுக்கிறது. அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக்கியுள்ள ஜெயிலர் திரைப்படம் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அடுத்த நிலைக்கு அவர் நகர்வார் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பீஸ்ட் படத்தை போல் ஆகாமல் சென்றாலே தப்பித்துவிடுவார் நெல்சன். இது சரியாக சென்றால் நெல்சன் நிச்சயம் வேட்டைமன்னன்னை தொடர்வார். நடிகர் சிம்புவும் அதற்கு முழு ஒத்துழைப்பு தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முதலில் நெல்சன் இந்தப் படத்தின் கதையை சொல்லாமல் ஒரு சிறிய வீடியோ காட்சியை வைத்தே சிம்புவின் சம்மதத்தைப் பெற்றார்.

சிம்புவுக்கு மிகவும் பிடித்தமான கதையை அவர் தற்போது இருக்கும் நிலையில் விடமாட்டார். அதிரடியான கம்பேக் கொடுத்துள்ள சிம்பு பயங்கரமான பசியில் இருக்கிறார் என அவரே குறிப்பிட்டுள்ளார். வேட்டைமன்னன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகினார். ஒருவேளை இந்த பிராஜெக்ட் தொடர்ந்தால் அனிருத் இல்லாமல் முதல் முறையாக வேறு இசையமைப்பாளருடன் நெல்சன் இணைவதைக் காணலாம்.

Most Popular