Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாஇயக்குனர் நெல்சனுக்கு அடித்த லக்.. ஒரே படத்தில் இணையும் 3 பிரபலங்கள்

இயக்குனர் நெல்சனுக்கு அடித்த லக்.. ஒரே படத்தில் இணையும் 3 பிரபலங்கள்

டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் தற்பொழுது ஜெயிலர் திரைப்பட வேலையில் பிஸியாக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்தது.

- Advertisement -

கடந்த வாரம் இத்திரைப்படத்தினுடைய ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியிடப்பட்டு விட்டது. வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைப்படம் வெளியிடப்பட இருப்பதால்
அதற்கான வேலையில் ஆர்வம் காட்டி வருகிறார்.இயக்குனர் நெல்சன் திரைப்படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளிவரும் இந்த சமயத்தில் புதிதாக ஒரு தகவலும் வெளிவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் ஒருவரான நடிகர் தனுஷ் உடன் இயக்குனர் நெல்சன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளிவந்திருக்கிறது.
திரைப்படத்தைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தை நெல்சன் தனுஷை வைத்து இயக்கு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார். இதனுடைய படப்பிடிப்பு முடிந்து திரைப்படம் வெளியிட்ட பிறகு நெல்சன் இயக்க இருக்கம் திரைப்படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் இத்திரைப்படத்தை உலக நாயகன் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இண்டஸ்ட்ரி தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தனுஷ் நடிக்கும் திரைப்படத்தை கமலஹாசன் முதன் முதலில் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் மூன்று திரைப்படத்தின் ஒய் திஸ் கொலவெறி என்ற பாட்டின் மூலம் தான் அனிருத் பிரபலமானார்.

அந்த காலகட்டத்தில் நடிகர் தனுஷிற்கும் அனிருத்துக்கும் நிறைய பாடல்கள் ஹிட் கொடுத்தது. இதை தொடர்ந்து கடைசியாக அவர் திருச்சிற்றம்பலம் என்ற தனுஷின் திரைப்படத்தில் இசையமைத்திருந்தார். அத்திரைப்படத்தில் உள்ள பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

அதற்குப் பிறகு தற்பொழுது தனுஷ் நடிக்கப் போற இந்தி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் என்பதால் இதன் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் இத்திரைப்படத்தினுடைய கதாநாயகி துணை நடிகர்கள் யார் என்பதெல்லாம் விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular