Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாசார்ப்பட்டா 2 எப்போது.. ? அதிகாரபூர்வ அறிவிப்பு கொடுத்துவிட்ட பா.ரஞ்சித்.. !

சார்ப்பட்டா 2 எப்போது.. ? அதிகாரபூர்வ அறிவிப்பு கொடுத்துவிட்ட பா.ரஞ்சித்.. !

லாக்டவுனில் அமேசான் தளத்தில் வெளியாகி மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சார்ப்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜி.எம்.சுந்தர், ஜான் விஜய், கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் இப்படம் உருவானது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.

- Advertisement -

மெட்ராஸ் பாக்ஸிங் க்ளப்புகளுக்கு இடையே நடக்கும் சண்டைகள் தான் படமே. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துமே சிறப்பு. ஒரே ஒரு குறை இது திரையரங்கில் வெளியாகியது தான். இயக்குனர் ரஞ்சித் இப்படத்திற்கு அடுத்த பாகம் இருப்பதை உறுதி செய்தார்.

சில மாதங்களுக்கு முன் அந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக போஸ்டர் மூலம் உறுதியாகியது. பல குழப்பங்களுக்குப் பின் மீண்டும் சந்தோஷ் நாராயணன் அவர்களே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான வேலைகளையும் பா.ரஞ்சித் & கோ செய்து கொண்டே இருக்கிறார்கள்.

- Advertisement -

தற்போது தங்கலான் படத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் பா.ரஞ்சித். படப்பிடிப்பின் போது விக்ரமுக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் இது குறித்து அவர் பேசினார். விக்ரமின் நிலை பற்றியும் செய்தியாளர்களிடம் கூறினார்.

- Advertisement -

அவர் கூறுதாவது, “ வருகின்ற ஜூன் 15ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பை துவங்குகிறோம். இன்னும் 12 நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது. அத்துடன் மொத்த படத்தின் ஷூட்டிங்கும் நிறைவுப் பெற்றதுவிடும். ” என்றார். நடிகர் விக்ரம் எப்படி இருக்கிறார் எந்த கேள்விக்கு, “ அவர் ஜாலியா இருக்கார். ” என நகைச்சுவையாக பதிலளித்தார்.

அதன் பிறகு சார்ப்பட்டா பரம்பரை 2 எப்போது என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். உடனே ரஞ்சித், “ அடுத்த ஆண்டு ! ” என சிம்பிளாக முடித்துவிட்டார். சில தினங்களுக்கு முன்பு சார்ப்பட்டா நாயகன் ஆர்யா 2ஆம் பாகத்தின் திரைக்கதை வேலைகள் நடந்துக் கொண்டிருப்பதாக கூறினார். தற்போது ரஞ்சித்தும் அடுத்த ஆண்டு என்பதை உறுதிப்படுத்தியுள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இந்த முறை திரையரங்கில் பலத்த கொண்டாட்டங்கள் இருக்கும்.

Most Popular