Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாபிக் பாஸ் அசீமை இயக்கும் சிவகார்த்திகேயன் இயக்குனர்..!

பிக் பாஸ் அசீமை இயக்கும் சிவகார்த்திகேயன் இயக்குனர்..!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமா ராஜா, ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளரான அசிமை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இயக்குனர் பொன்றாமை பொறுத்தவரை கிராமத்து பானையில் தான் அவருடைய திரைப்படங்கள் அமைந்திருக்கும். இவர் எதற்கு முன்பு எடுத்த திரைப்படங்கள் எல்லாமே அதேபோன்றுதான் அமைந்திருக்கும். அதிலும் இவர் கடைசியாக எடுத்த எம்.ஜி.ஆர் மகன் என்ற திரைப்படமும் டிஎஸ்பி என்ற திரைப்படமும் எதிர்மறையான விமர்சனங்களை தான் பெற்றது .இது எதுவும் திரையரங்கில் வெளியிடப்படவும் இல்லை.

- Advertisement -

இதனால் தற்பொழுது எடுக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் மீது இயக்குனர் பொன்ராம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் தான் நடிகர் சிவகார்த்திகேயனின் திருப்புமுணையாக அமைந்தது.

- Advertisement -

இதுபோன்ற வெற்றிப் படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இயக்குனர் பொன்ராமின் இயக்கத்தின் முதன் முதலாக வெள்ளி திரைக்கு அறிமுகமாகிறார் சின்னத்திரை நடிகர் அசிம். இவர் பிக் பாஸ் இல் இருக்கும் பொழுது இவர் மீது பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருந்தது.

இவர் நியாயமான கருத்தாகவே இருந்தாலும் அதை சண்டை போடுவது போன்று எடுத்துரைப்பார். இது இவருடைய இயல்பு. ஆனால் திறமையானவர் என்பதும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக இவர் ஆன போது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

தன்னுடைய இலக்கை நோக்கி எதைப் பற்றிய கவலையும் இன்றி யாரைப் பற்றியும் சிந்திக்காமல் எதிர்நோக்கி சென்று வெற்றியடைந்தவர் நடிகர் அசிம்.

மேலும் விஜய் டிவியின் ஒரு சாதாரண இடத்தில் இருந்து தற்போது மிகச்சிறந்த நடிகர்களாக வெள்ளித்திரைகள் சாதித்து வருபவர்கள் பட்டியலில் நடிகர் அசிமும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் இயக்குவதற்கான வேலையில் ஈடுபடும் இவர்கள் தற்போது ராஜஸ்தானில் இத்திரைப்படம் இயக்குவதற்கான இடத்தை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

Most Popular