இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ் ராஜமவுலி தன் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கைப்பற்றும் விருதுகளை வாங்க நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கிறார். சென்ற ஆண்டு மார்ச் மாதம் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று வசூல் சாதனைகள் பல புரிந்தன. இந்தப் படம் 1000 கோடிக்கு மேல் வியாபாரம் பார்த்துவிட்டது.
நியூயார்க் இதழுக்கு பேட்டிக் கொடுக்கும் போது நிருபர் ஒருவர் இயக்குனர் ராஜமவுலியிடம், “ அமெரிக்கர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இந்தியத் திரைப்படங்களை பரிந்துரையுங்கள் ” எனக் கேட்டார். அதற்கு, “ சங்கராபரணம், ராஜ்குமார் ஹிரானியின் முன்னா பாய் எம்.பி.பி.எஸ், பண்டித் குயீன், ப்ளாக் ப்ரைடே, வெற்றிமாறனின் ஆடுகள் ” எனப் பட்டியலிட்டார் ராஜமவுலி.
கோலிவுட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே வெற்றிமாறன் தனக்கென்ற ஓர் அங்கத்தைப் பெற்றுள்ளார். தற்போது இந்த பட்டியல் மூலம் அவரின் புகழை சற்று தூரம் பரப்பியுள்ளார் ராஜமவுலி. வெற்றிமாறனின் ஆடுகளம் திரைப்படம் எக்காலத்திற்கும் நின்று பேசும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சேவல் சண்டை மற்றும் அவ்வூர் மக்களின் மோதலைப் பற்றிய படமான இது 5 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. தங்கள் படத்தை பரிந்துரை செய்ததற்கு ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்துள்ளது ஃபைவ் ஸ்டார் நிறுவனம்.
ஆஸ்கரில் ஆர்.ஆர்.ஆர்
இயக்குனர் ராஜமௌலி படத்திற்காக பல ஆண்டுகள் உழைப்பைக் கொடுத்துள்ளார். நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஷ்ரேயா சரண், சமுத்திரகனி என பல நட்சத்திரங்கள் ஜொலிக்க பின்னணியில் கீரவாணி அற்புதம் செய்ய படம் சிறப்பாக உருவானது.
இந்தப் திரைப்படத்தில் இசைக்கு ஈடாக நடனமும் மாஸாக இருக்கும். நாட்டு நாட்டு பாடலில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் அவ்வளவு வேகமாக கை கால்களை அசைத்து ஆடுவது வாயைப் பிளர்க்க வைத்தது. அண்மையில் இந்தப் பாட்டிற்கு குளோபல் விருது கிடைத்தது. விரைவில் மிக உயரிய விருதான ஆஸ்காரையும் இந்தியாவுக்கு கொண்டு வரும் பாருங்கள்.