Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஇது லிஸ்டிலே இல்லையே.. முதல்வன் 2வில் இணையும் விஜய், ஷங்கர்

இது லிஸ்டிலே இல்லையே.. முதல்வன் 2வில் இணையும் விஜய், ஷங்கர்

தமிழ் சினிமாவின் மிக பிரம்மாண்டமான இயக்குனர் என்று பெயர் வாங்கியவர் சங்கர். இவர் தற்போது இந்தியன் 2 என்ற தமிழ் படத்திலும் கேம் சேஞ்சர் என்ற தெலுங்கு படத்திலும் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் இருந்து 2.0 க்கு பிறகு விலகி இருந்த சங்கர் மீண்டும் தமிழில் கவனம் செலுத்தி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விஜயின் மார்க்கெட் தற்போது பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.

மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார். இதற்கான காய்களை இப்போது நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் நண்பன் படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யும் இயக்குனர் சங்கரும் இணைய உள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

இயக்குனர் சங்கர் நடிகர் விஜய்க்கு ஒரு ஒன் லைன் கதையை சொல்லி இருப்பதாகவும் அது விஜய்க்கு மிகவும் பிடித்து போய் உடனே நடிக்க ஒப்பு கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

எனினும் ஷங்கர் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களை முடித்த பிறகு தான் விஜயின் இந்த படத்தை தொடங்க உள்ளார். இதனால் இது விஜயின் 69 அல்லது 70 வது திரைப்படம் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விஜய் 1999 ஆம் ஆண்டு அவருக்கு வந்த முதல்வன் வாய்ப்பை வேண்டாம் என்று நிராகரித்து விட்டார். அதற்கு காரணம் அரசியல் கதைகளத்தில் அப்போது நடிக்க வேண்டாம் என்பதற்காக தான்.

ஆனால் தற்போது விஜயை அரசியலுக்கு செல்ல ஆயத்தமாகி வருவதால் முதல்வன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார்.விஜய் எப்படி முதலமைச்சராகி அப்போது உள்ளே அரசியல் சூழலை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை படத்தின் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

24 ஆண்டுகளுக்கு முன்பு விட்ட வாய்ப்பை மீண்டும் பயன்படுத்த விஜய் முடிவு எடுத்திருக்கிறார். இந்த செய்தி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசியலுக்கு வந்த பிறகு விஜய் நடிக்க மாட்டார் என்ற செய்தி பரப்பப்பட்ட நிலையில் விஜய் அடுத்தடுத்த படங்களில் நடித்த திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Popular