Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாவெறித்தனமாக வேலை செய்யும் ஷங்கர்.. ஜெய்லர் சாதனையை உடைக்க போகும் கமல்

வெறித்தனமாக வேலை செய்யும் ஷங்கர்.. ஜெய்லர் சாதனையை உடைக்க போகும் கமல்

தமிழ் சினிமாவில் விக்ரம் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கம் பேக் கொடுத்த நடிகர் கமல் தற்போது ஓர் ஆண்டாக அவருடைய படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. நடப்பாண்டில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படமும் தாமதமாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்தியன் 2 திரைப்படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திர தின விழா முன்னிட்டு இந்தியன் 2 திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு பக்கம் ஜெயிலர் சூறாவளி தமிழகத்தை தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தது லியோ சுனாமி பாக்ஸ் ஆபிஸை தாக்க தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதற்கு நடுவே சப்தமே இல்லாமல் ஒரு மிகப்பெரிய ஏவுகணையை தயாரித்து வருகிறார். இயக்குனர் சங்கர் 2.0. திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவில் எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்த நிலையில் கமலை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனராக சங்கர் இருந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ்,அட்லி, நெல்சன், எச் வினோத் போன்ற இயக்குநர்கள் வளம் வரத் தொடங்கி விட்டார்கள்.

- Advertisement -

அதனால் சங்கரின் காலம் மலையேறி விட்டதாக ரசிகர்கள் நினைக்கும் நிலையில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவே வெறித்தனமாக சங்கர் பணியாற்றி வருகிறார்.

கோலிவுடில் நான் தான் எப்போதுமே நம்பர் ஒன் இயக்குனர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஹாலிவுட் தரத்தில் இந்தியன் 2 திரைப்படத்தை நடிக்கும் கமலை வைத்து இயக்கி வருகிறாராம். இந்தியன் 2 திரைப்படம் குறித்து ரசிகர்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலும் அதனை மிஞ்சும் அளவுக்கு நெற்றியில் வந்து அடிப்பது போல் ஒரு படத்தை தயார் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த படம் திரைக்கு வரும் போது ரசிகர்கள் கமலை மட்டுமல்லாமல் இயக்குனர் சங்கரையும் கொண்டாடுவார்கள் என அந்தப் படத்தில் பணியாற்றுபவர்கள் தெரிவிப்பதாக பத்திரிக்கையாளர் அனந்தன் ஒரு பேட்டியில் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular