சினிமா

‘விக்ரம்’ முதல் ‘டான்’ திரைப்படம் வரை.. தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்; எந்த சேனலில் எந்த சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பாகிறது? மொத்த பட்டியல் இங்கே..

தீபாவளி சிறப்பு திரைப்படம் மற்றும் அது வெளியாகும் சேனல் ஆகியவற்றின் முழு பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசு இனிப்புகள் மற்றும் புத்தாடை ஆகியன தாண்டி டிவியில் குடும்பத்துடன் கண்டுக்களிக்கும் சிறப்பு திரைப்படங்களும் அடங்கும். சிறு வயது முதல் தற்போது வரை குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளி அன்று ஒளிபரப்பப்படும் சிறப்பு திரைப்படங்களை கண்டுகளிக்கும் ரசிகர்கள் இன்றளவும் இருக்கின்றனர்.

அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த வருட தீபாவளி தினத்தன்று எந்த சேனலில் எந்த திரைப்படம் ஒளிபரப்பப்பட இருக்கிறது என முழு பட்டியலை இங்கே தொகுத்து தந்திருக்கிறோம்.

கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இந்த வருடம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படம் ஏற்கனவே ஹாட்ஸ்டார் ஓ டி டி தளத்தில் வெளியானது. வருகிற தீபாவளி அன்று விஜய் டிவியில் சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி, வசூலில் 200 கோடியை தாண்டிய பீஸ்ட் திரைப்படம் இந்த வருடம் தீபாவளி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்து வெளியான டான் திரைப்படம் வசூலில் 100 கோடியை தாண்டியது. இத்திரைப்படத்தின் தமிழக விநியோகஸ்து உரிமம் ரெட் ஜெயின்ட் பிக்சர்ஸ் இடம் இருக்கிறது. இந்த வருடம் தீபாவளி தினத்தன்று கலைஞர் டிவியில் சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பப்பட இருக்கிறது.

மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த தெலுங்கில் வெளியாகி வெற்றி படமாக மாறிய சர்க்கார் வாரி பட்டா திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

தீபாவளி திரைப்படம் மற்றும் ஒளிபரப்பு சேனல் பட்டியல்:

விக்ரம் – விஜய் டிவி

பீஸ்ட் – சன் டிவி

டான் – கலைஞர் டிவி

சர்காருவாரிபட்டா – ஜீ தமிழ்

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top